Tuesday, 30 August 2011

உன் நினைவுகள்!

குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?

நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!

எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'

இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?

காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?

பொல்லாதக் காதலால் வந்த  வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...

சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!

Saturday, 27 August 2011

நித்யா - பத்து நாள் காதல்

பிளாட்பாரத்தில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.பார்த்தவுடன் எரிச்சல் ஏற்பட்டது அருண்சுந்தருக்கு.வேர்வை கசகசப்பில்”ச்சே...” என்றான்.காலை 8.10 வர வேண்டிய எலக்டிரிக் டிரெயின் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்தது. வண்டியில் கூட்டம் முண்டியடித்தது.அடித்துப்பிடித்து ஏறினான்.



ஏறிய கம்பார்ட்மெண்ட்டில் சில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் இருந்தார்கள்.கூட்டம் அதிகமாகி விட்டால் பொது கம்பார்ட்மெண்டில் பெண்கள் நிறைய பேர் பார்க்கலாம்.எல்லாம் தினமும் பிளாட்பாரத்தில் பார்க்கும் முகம்தான்.குறிப்பாக அந்த முகத்தை அடிக்கடி பார்க்கத் தோன்றியது அருண் சுந்தருக்கு.புது முகமாக இருந்தது.பிடித்தும் இருந்தது.

ஸ்டேஷனில் இறங்கி விடுவிடுவென சுரங்கபாதையின் வழி கடந்து பஸ் டெர்மினஸைஅடைந்தான். அவன் செல்லும் பஸ் இன்னும் வரவில்லை.அது ஷெட்டிலிருந்து வந்து அங்கிருந்துதான் புறப்படும். எல்லாமே இன்றைக்கு லேட்.ஆபிஸ் இன்று லேட்டாகி விடுமா?மீண்டும் எரிச்சல் ஏற்பட்டு ஆபிஸ் கவலைகளில் ஆழ்ந்தான்.இன்று முக்கியமான மீட்டிங்.போர் அடிப்பார்கள்.பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

“எக்ஸ்கியூஸ் மி .....”

முதுகின் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டது.இனிமையாக இருந்தது.திரும்பிப் பார்த்தான். சிநேக பாவத்துடன் சிரித்தாள் அந்தப் பெண்.

“ பஸ் போயிடிச்சா..?

“எந்த பஸ்....”

நம்பர் சொன்னாள். அருண்சுந்தர் பயணிக்கும் பஸ்தான்.

“இல்லையே...”

“தாங்கஸ்”

”நா யூஷுவலா வேற ரூட்லதான் போவேன். இன்னிக்கு இந்த ரூட்ல ட்ரை பண்ணலாம்னுதான் இங்க வந்தேன்”

“இது பெஸ்ட் ரூட்....பிராப்ளம் அவ்வளவா இல்ல”

”வெரி நைஸ்......”

”என் பேர் நித்யா. பஸ்ட் இயர் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறேன்”

கல்லூரி பெயரையும் சொன்னாள்.

”ஐ ஆம் அருண்சுந்தர்...பிரைவேட் பேங்கல வொர்க் பண்றேன்”

முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்துக்கொண்டாள்.
துடைத்துவுடன் வில் போல் நீண்ட அடர்த்தியான கரு நிற புருவ முடிகள் வரிசையாக சிலிர்த்து மடங்கின.பவுடருடன் இருந்த செயற்கை அழகு போய் முகத்தில் ஒரு இயற்கை களை சொட்டியது.வேர்வை ஈரஙகள் நெற்றி மற்றும் காதோர முடிகளில் படிந்து சில கற்றை முடிகள் இரு காதருகிலும் கொக்கி மாதிரி விழுந்து மேலும் களையைக் கூட்டியது. காதில் தொங்கிய டிராப்ஸ் மெதுவாக ஆடியது.தன்னை உற்றுப் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன் தலை கவிழ்ந்தாள். அவனும் உணர்ந்து வேறு பக்கம் பார்வையை செலுத்தினான்.

பார்த்த மாதிரி இருக்கிறதே. யோசித்தவுடன் ஞாபகம் வந்து விட்டது.தான் வந்த மின்சார வண்டியில் இந்த முகத்தைத்தான் பார்த்தான்.அப்போது அவள் புரிந்த புன்னகையை ஏற்றுக்கொண்டு பதில் புன்னகை புரிந்தேனா?அவனுக்கு ஞாபகம் இல்லை.இந்த முகத்திற்க்கு சத்தியமாகப் புன்னகைத்திருக்க வேண்டும்.புரியாதது வன்முறையாகப் பட்டது .

அந்த மின்சார ரயில் காட்சியை மனதில் கொண்டு வந்து மீண்டும் புன்னகை புரிந்தான்.பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.

எதற்கு புரிந்தாள்? யாரோ அவள் பக்கத்தில் இருந்தவர் ரொம்ப சத்தமாக ரயில்வே டிபார்மெண்ட் இயங்கும் விதத்தை தப்பு தப்பான ஆங்கிலத்தில் திட்டியதுதான் காரணம்.அதுவும் ஞாபகம் வந்தது புன்னகைத்து முடித்தவுடன்.

பஸ்ஸிலும் என்றுமில்லாத அளவு கூட்டம் ஏறியது.அவள் முன்பக்கத்தில் முண்டியடித்து சாமர்த்தியமாக ஏறிவிட்டாள்.அவனும் தொடர்ந்து ஏறி பஸ்ஸின் நடுவில் வந்து நின்று கொண்டான்.

அவள் கூட்டத்தில் இடிபடுவது பார்க்க மனசு கஷ்டப்பட்டது.
அவளுக்கு பெண்கள சீட் அருகே கொஞ்சம் இடம் செய்து அவளை தன் முன்னே நிற்க செய்தான்.

”தேங்கஸ்” என்றாள்.”இட்ஸ் ஓகே” என்று புன்னகைத்தான் அருண்.

“நா இது பெஸ்ட் ரூட்ன்னு சொன்ன முகூர்த்தம்......”

அவள் வெகுளியாகச் சிரித்தாள். வெளிப்பட்ட அழகு அவளை மீண்டும் மீண்டும் பார்க்க இழுத்தது.இதெல்லாம் யாருக்கு கிடைக்கப் போகிறது. வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியும் இபபடியுமாக யோசனை ஓடியது.அவளைப் பார்பதை தவிர்க்க முடியவில்லை.

அவனுடைய முகவாய் கட்டையின் நேர் கிழேதான் அவள் நின்றிருந்தாள்.நல்ல சிவப்பு.இடது கை கைப்பிடியைப் பிடித்திருந்தது. மணிக்கட்டில் வாட்ச்.அதன் டயல் காப்பிக்கொட்டை வடிவத்தில்.ரொம்பவும் கலையம்சத்தோடு ஒரு பூச்சி மாதிரி மணிக்கட்டில் ஒட்டிக்கொண்டிருந்தது.வலது கைமணிக்கட்டில் கறுப்பு வண்ணத்தில் மிகவும் மெல்லிசான மந்திரித்த கயிறு. அலை அலையாக பூனை முடிகள்.தான் ரொம்பவும் சின்ன வயதில் பார்த்த நடிகை ஷோபா மாதிரி ஜாடை.குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் கச்சிதமாக இருந்தாள்.

முடிக்கற்றைகளைப் பக்க வாட்டில் ஒதுக்கும் பாவனையில் அவனை ஒரு முறை முழுவதும் பார்த்து சிநேக பாவத்துடன் புன்முறுவல் செய்தாள்.அவனும் செய்தான்.தான் பார்ப்பதை உள்ளுக்குள் உணர்கிறாளோ.நாகரிகமாகத்தான் அவளை ரசிக்கிறேன்.இதுவும் தெரிந்துதான் இருக்கும் அவளுக்கு.அவளும் தன்னை ரசிக்கிறாளோ?

இருவரும் எதுவும் பேசாமல் மெளனமாக நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.அருண்சுந்தருக்கு பயணம் முழுவதும் ஒரு மாதிரி விர்ர்ரென்று மேகத்தினுள் பயணிப்பது போல் பிரமை.

கண்டக்டர் “டொப்.. டொப்” என்று தட்டியபடி “டிக்கெட்..டிக்கெட்...என்றார்.

அவன் பணத்தை எடுக்கும் அதே வேளையில் அவளும் எடுத்தாள்.அவள் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தன் பணத்தில் இருவருக்கும் டிக்கெட் எடுத்தான்.அவள் டிக்கெட்டையும் மீதி சில்லறையைஅவளின்
சிறிதான உள்ளங்கையில் திணித்தான்.தன் செய்கைக்கு அவள் முகபாவம் மாறினால் போல் தெரியவில்லை.சாந்தமான பாவம்தான்.


அவள் நிறுத்தம் வந்ததும் முகபாவத்திலேயே வரேன் என்றாள்.அவன் குனிந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.அவளுடன் அவளுடைய கல்லூரி நண்பிகள் சேர்ந்து ரோடை கிராஸ்செய்துக்
கொண்டிருந்தார்கள்.திரும்பி குனிந்து பார்த்து
கையசைத்தாள்.அவனும் கையசைத்தான்.

நித்யா அருண்சுந்தர் மெலிதாக முணுமுணுத்தப்படி ஆபிஸில் நுழைந்தான்.

மறு நாள் இருவரும் சொல்லி வைத்தார்போல் டெர்மினஸ்ஸுக்குஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டார்கள்.இருவரும் மனதிலும் வெடகம் பிடிங்கி தின்றது.இரண்டு பேரும் இருப்பதிலேயே மிக சிறப்பான உடையைதேர்ந்தெடுத்து உடுத்தியிருந்தார்கள்.அவள் டிரெண்டியான சூடிதார் மற்றும் மாட்சிங் துப்பட்டா.அவன் கண்ணேப் பட்டுவிடும் போலிருந்தது. அருண் புது ஜீன்ஸும் டீ ஷ்ர்ட்டும் அணிந்திருந்தான். கச்சிதமாக ஷேவிங் மற்றும் ஹேர் கட் செய்திருந்தான்.

அடுத்த இரண்டு நாள் கிட்ட கவனித்ததில் அவளிடம் எல்லா விஷயத்திலும் ஒரு கலை நேர்த்தி தெரிந்தது. ஒரு ஒழுங்கும் இருந்தது.நாளுக்கு நாள் அவளைப் பிடித்துக் கொண்டேயிருந்தது.
”நேத்திக்கு ஆபிஸ் லேட்டா”

“ஆமாம்..”

“உங்களுக்கு காலேஜ்...”

“லேட்தான்...”

முறுவளித்தாள்.

அடுத்து வரிசையாக வந்த நாட்களில் அழுது வடியும் அந்த பஸ் டெர்மினஸ் களை கட்ட அரம்பித்தது.அவன் முன் வந்தால் அவளுக்கு சீட் போட்டான்.அவள்முன் வந்தால் அவனுக்கு சீட் போட்டான். ஒரே (பொது)சீட்டில் பிரயாணித்தார்கள்.சில நாட்களில் ஸ்டேஷனில் காத்திருந்து உராசியபடி நடந்து பஸ் டெர்மினஸ் அடைந்தார்கள்..இளநீர் குடித்தார்கள்.வ்ழுக்கையை ஒரே மட்டையில் பகிர்ந்துக் கொண்டார்கள். கடைசி ஸ்டாப்பில் இறங்கி மறுபடியும் பஸ் ஏறி வழக்கமான ஸ்டாப்பில் இறங்கினார்கள்.

இது அது என்றில்லாமல் எல்லாவற்றையும் பேசினார்கள்.பேசிக் கொண்டே நடந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் மறக்காமல் கையசைத்தார்கள்.
சிரித்துக்கொண்டே கல்லூரிக்குள்ளும் ஆபிசிலும் நுழைந்தார்கள்.எதோ ஒரு இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருண்சுந்தரை பிடித்துத்தான் இருந்தது நித்யாவுக்கு. பழகிய நாட்களில் நாகரிகமாகத்தான் தெரிந்தான்.அவனின் நிறம் குணம் எல்லாம் ஒத்துத்தான் போயிற்று.ஜீன்ஸ் உடுத்தும் நாட்களில் அவனின் தெறிக்கும் அபரிதமான மேன்லினெஸ்.ஹேர் ஸ்டைல்.ஆண் வாசனை.அழகான மீசை.அதிரும் குரல்.வேக நடை.

ஏன் இருவரின் நீள் உயர அகலங்களும் கூட. அன்று அந்த பாஸ்ட் புட் கடையின் ஆள் உயர கண்ணாடியில் பார்த்த போது பொருந்தித்தான் வந்தது.

பத்தாவது நாள் இரவு .......

எல்லாம் சரி.ஆனால் தனைப் பற்றிய விஷயம்?சுரீர் என்றது.நித்யா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

எல்லாம் சரியாக இருந்தாலும் கடைசியில் தான் சொல்லப் போகும் விஷயத்தில் முகம் சுருங்கி விடுவான்.வாய் கசக்கும்.“யூ” டேர்ன் எடுத்து அடுத்த நாள் காணாமல் போய் விடுவான்.அவனுக்கு வேறொருத்தி இருப்பாள்.
நித்யாவுக்கு அடுத்த பெரிய அடி.நித்யாவுக்கு அடி வயிறு கலங்கியது.பஸ் ரூட் மாற்றி விடலாமா?

சே... சொல்லிவிட்டு பழகியிருக்க வேண்டுமோ?ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்த அடுத்த நாளே சொல்லியிருக்கலாம்.தப்பு பண்ணிவிட்டேன்.அவனும் நெருங்கத் தொடங்குகிறான் என்று தெரிந்த அன்றாவது சொல்லி இருக்கலாம்.


அவனும் காதலிக்கிறானா?கன்பார்ம் செய்து விட்டு சொல்லலாமா? தாங்குவானா?சும்மா நட்பாகத் தெரியவில்லை.நன்றாக தெரிகிறது காதல் என்று.. நடிக்கவில்லை.Look beyond what you see! பழமொழி ஞாபகம் வந்தது. தன் வீட்டைப் பொறுத்தவரை யாரும் தடை கிடையாது. காதல் பிறகு திருமணம்.எல்லாம் ஓகே. ஆனால் என் விஷயம்?


திரும்ப திரும்ப அவன் முகம் நினைவில் வந்து அலையடித்தது.”எனக்கு அவன பிடிச்சிருக்கு....ஆனா” என்று மெலிதாய் முணுமுணுத்து வாய் பிளந்தபடி தூங்கியே போனவள் திடுக்கிட்டு காலை 2மணிக்கு எழுந்தாள்.தீர்மானித்தாள் தன் விஷ்யத்தை அவனிடம் சொல்லி விட வேண்டுமென்று.மீண்டும் தூங்கினாள்.


அடுத்த நாள்...


நித்யா தினமும் ரயிலை விட்டு இறங்கும்போதே சந்தோஷத்துடந்தான் இறங்குவாள்.டெர்மினஸ்ஸை நெருங்கும் போது ஒரு வித குதூகலம் இறக்கைக் கட்டி ஆடும்.அவனைப் பார்த்தவுடன் பிய்த்துக் கொள்ளும்.

இன்று எல்லாம் தலை கிழ்.படபடத்தபடி நடந்தாள்.மினரல் வாட்டர் குடித்தாள்.அடிக்கடி வியர்வையை துடைத்துக் கொண்டாள்.அவளுக்கே தான் ரொமப ஓவர் ஆக்டிங் பண்ணுகிறோம் என்று புரிந்துதான் இருந்தது.தவிர்க்க முடியவில்லை.

வழியில் தினமும் தென்படும் பிள்ளையார் கோவில் விபூதியை சின்னதாக இட்டு வேண்டிக்கொண்டாள்.கொஞ்சம் தெளிவானாள்.

டெர்மினஸ்ஸில் நுழைந்தாள்.அங்கு அருண்சுந்தர் இல்லை.நித்யாவிற்கு உறுத்தியது.சிறிது நேரம் கழித்து நுழைந்தான்.நடையில் வழக்கமான ”விறு விறு” இல்லை.முகத்திலும் வழக்கமான களை இல்லை.ஒரு நாள் தாடி. பழைய சட்டை பாண்ட்.

அருண் தான் நிறைய பேச வேண்டும் என்றான்.நித்யாவும் சம்மதித்தாள்.படபடப்பு கொஞ்சம் கூடியது.லீவு போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனார்கள்.இருவரும் ரொம்ப பேசிக்கொள்ளவில்லை.நித்யா எப்போதுப் பேசப் போகிறான என்று காத்து காத்து ஏமாந்தாள்.எல்லா இடங்களையும் சுற்றி விட்டு ஒரு இருட்டு ரெஸ்டாரெண்டில் நுழைந்தார்கள்.

”ஏன் ... இன்னிக்கி ஒரு மாதிரி டல்லடிக்கிற? ஏதாவது மேட்டர்”

“மனசு அப்செட்”

“ஏன்?”

“எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சு ஒரு இடத்தில பாத்து வீட்ல சொல்லீட்டாஙக”

“நல்லதாப் போச்சு.வீட்டுக்கு தெரிஞ்சுதானே ஆகனும் ஒரு நாள்.அதுக்கு என்ன இப்ப?”

“நம்ம மேரேஜ் பண்ண முடியுமான்னு தெரியல...”

“ஏன்...” கலக்கத்துடன் கேடடாள்

“இல்ல ஜாதி...ஸ்டேட்டஸ்... குலம், கோத்ரம் அது இதுன்னு பார்ப்பாங்க....எங்க வீட்ல”

நித்யா உள்ளுக்குள் உடைந்து போனாள்.“யூ” டேர்னுக்கு உண்டான அறிகுறிகள் தெரிந்தன. மெளனமானாள்.

அருண் தொடர்ந்தான்.

“போன பத்து நாளும் ஒரே கிக்குதான். ரொம்ப சுகம்மா இருந்தது.ஐ ரியல்லி என்ஞாய்ட்...காதல அனுபவத்துல தெரிஞ்சுகிட்டேன்.அந்த கிக் நடுவிலும் இது ஒத்து வருமான்னு ஒரு அவநம்பிக்கை நூல் ஒடிட்டே இருந்தது.ஒண்ண ரொம்ப பிடிச்சிருந்தது.அதே சமயத்துல மேரேஜ் நடந்தா சூப்பரா இருக்கும்னு வேற ஆசை ஒரு பக்கம். ஒரே குழப்பம்.எங்க ஊர்காரங்க நம்ம ரெண்டு பேரையும் ஒண்ண வச்சுப் பார்த்ததும் நல்லதாப் போச்சு.”

நித்யாவுக்கு அவன் பேசுவது கசந்து வழிந்தது. அவனை யாரோ மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாள்.எதுவும் பதில்
பேசவில்லை.பேசவும் பிடிக்கவில்லை.
இரண்டு நிமிடம் ஓடியது.

”ரொம்ப ரொம்ப சாரி நித்யா ....ப்ளிஸ்.....சிட்சுவேஷன புரிஞ்சுகோம்மா..உன்ன ஹ்ண்ட்ரட் பர்செண்டு பிடிச்சிருக்கு..யூ வார் அ வெரி நைஸ் வித் குட் டெம்பரமெண்ட்.யாரா இருந்தாலும் கொடுத்து வச்சுருக்கனும்,, ஆனா நம்ம கல்யாணம் நடக்காது.எனக்கு கொடுத்து வைக்கல. எங்க ஊர்காரங்க பொண்ணு ஒகேயாடிச்சு. கொடுமை என்னென்னா.....”


“கொடுமையா?”

“அவள கல்யாணம் பண்ணிடுவேன்..ஆனா நம்பளோட லவ் மெம்ரீஸ் நாலைஞ்சு வருஷம் போட்டுப் படுத்தி எடுக்கப் போவுது. நினைச்ச பயமா இருக்கு...நித்யா..”

”அப்படியா..?” நித்யா விரக்தியாக சிரித்தாள்.

“ப்ச்” என்றான் அருண்.

“ஆனா எனக்கு இந்த மெம்ரீஸ் சுகமாக இருக்கப்போகிறது..
.வாழ்க்கைல வாங்கின முதல் அடிய இந்த ரெண்டாவது அடி மறக்கச் செய்யும் கொஞ்ச வருஷத்துக்கு...”

“ ஏற்கனவே ஏதாவது காதல் தோல்வியா நித்யா?”

”என்னோட முதல் பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ் உனக்கு யூஸ்புல்லா இருக்கும் அருண்”

நித்யா குரலில் சோகம் இழையோடியது.

“புரியல நித்யா”

”ஜாதி, பணம் இதெல்லாம் விட ஒரு சூப்பர் காரணம் இருக்கு என்ன வேண்டாம்னு சொல்றதுக்கு அருண்”

நித்யாவின் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.

“என்ன காரணம்...நித்யா ”

”நா ஒரு டைவோர்சி. மேரேஜ் ஆகி ஆறாவது மாசத்திலேயே பிரிஞ்சுட்டோம்.கருத்து வேறுபாடு.பின்னாடி டைவோர்ஸ் ஆயிடிச்சி”

அருண் அதிர்ந்து போனான்.புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

”உனக்கா....நம்பவே முடியல...ரொம்ப சாரி......நித்யா.உங்க கிட்டேயா கருத்து வேறுபாடு ...அவன் மெண்டலா இருப்பான் போல”

நித்யா அவனையே ஆழ்ந்து பார்த்தாள். கண்களில் நீர் முட்டியது

”நித்யா .. கவலப் படாத.......பேப்பர்ல இந்த விவரத்தெல்லாம் கொடுத்தா, அதே மாதிரி அந்த சைட்லயும் ஈக்குவல மாப்பள கிடைப்பாரு...கல்யாணம் நடக்கும்....”

வாழ்க்கையில் முதல் முதலாம ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது நித்யாவிற்கு.இதற்கு முன் இப்படி சீறியதில்லை.

”நா வெயிட் பண்றேன். கல்யாணம் முடிஞ்சு நீ ஒன்னோட அன்பு பொண்டாடிய டைவோர்ஸ் பண்ணிட்டு வா....ஈக்குவல ஆயிடுவே......கல்யாணம் பண்ணிக்கலாம்.ட்வெண்டி-ட்வெண்டி மாதிரி டைவர்சி-டைவர்சி”

முற்றும்

பத்து ரூபாய் நோட்டில் சுதா

சிண்டிகேட் வங்கி வாசலில் மோட்டர் பைக்கை நிறுத்தி சைட் ஸ்டாண்ட் போட்டான் சிவகுரு.ஸ்டைலாக சாய்ந்து நின்ற வண்டியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

சுதா தன்னை அணைத்த சூட்டை இன்னமும் உணர்ந்துக்கொண்டிருந்தான்.முதன் முறையாக சுதா பில்லியனில் உட்கார்ந்து வந்தாள். செல்லமாக தன் இடுப்பை அணைத்தபடி வந்து அவள் ஆபிசில் இறங்கிக்கொண்டாள்.

மனது முழுவதும் நிரம்பிய சந்தோஷத்தை வலுகட்டயமாக தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திருப்பிக் குறைத்து வேகமாக வங்கிக்குள் நுழைந்தான்.தோராயமாக ஐந்தாயிரம் ரூபாய் எடுக்க வேண்டும்.மீண்டும் புன்னகைத்தவாறே கேஷ் கவுண்டரை நெருங்கினான்.

தன் வருங்கால மனைவி சுதாவிற்கு மோதிரம் வாங்கத்தான் இவ்வளவு பணம்.சுதாவுக்கு சர்ப்ரைஸ் பரிசு. காதல் வழிய வழிய அவள் வெண்டை பிஞ்சு விரலில் அணியப் போகிறான்.அவளும் ஏதாவது அணிவாள்.அணிந்தவுடன் இருவருக்கும் ஒரு கல்யாணக் களை வரும்.

கவுண்டரில் பணத்தை வாங்கி எண்ணினான். பத்து ரூபாய்களை எண்ணும்போது கடைசி நோட்டில் ஏதோ எழுதி இருந்தது. சற்று உற்றுப் பார்த்தான்.Rajesh  Sudhaa என்று ஆங்கிலத்தில் எழுதி இருவருக்கும் இடையே மன்மத அம்பு படம் போட்டிருந்தது.காதல்! இது என் சுதாவா?பெயரின் கடைசியில் ரெண்டு அதே நியூமாராலஜி “aa”.முகம் சுருங்கியது. ஏசியிலும் மெதுவாக வியர்த்தது.விறுவிறுவென வெளியே வந்தான்.


ராஜேஷ் என்பவன் இந்த பாங்கில் வேலை செய்கிறானா?யார் இவன்?.சுதாவும் இந்த வங்கியின் சுற்று வட்டாரத்தில்தான் வீடு.சட்டென்று ஞாபகத்தில் வந்தது.அவள் கொடுக்கப்போகும்  இன்விடேஷன் அட்ரஸ் லிஸ்டில் இந்தப் பெயரைப் பார்த்திருக்கிறான்.திருமணத்திற்கு முன் காதலா?அவள் அணைத்த இடம் தகித்தது.அவள் மோதிர விரல் குஷ்டமாகியது.

ராஜேஷ்-சுதா பெயர் பொருந்தம் பொருந்தி வருகிறதே.ஆனால் தன் பெயர்தான் பொருத்தம் சரியாக இல்லை என்று அவளிடம் ஒரு முறை வருத்தப்பட்டிருக்கிறான்.சொல்லும்போது அவளும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

திருமணத்திற்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது.அவளிடம் கேட்டுவிடலாமா?

அவளுக்கு போன் செய்தான்.”சொல்லு சிவா..” பதில் பேசாமல் கட் செய்தான்.மறுபடியும் செய்தான”ம்ம்ம்..சுதா ஹியர்..சொல்லு சிவா.” மீண்டும் கட் செய்தான்.
அமுக்கமானான்.எனக்கே எனக்கு என்ற சுதா இப்படிப்பட்டவளா?மனதிற்குள் புழுங்கினான்.

பைக் பிடிக்கவில்லை. பல கிலோ மீட்டர் நடந்தான்.ஏதோ ஒரு நகைக் கடைக்குப்போனான்.ஏனோதானோவென்று எதையோ வாங்கினான்.இரண்டு நாள் கழித்து அவள் விரலில் சொருகினான். அடுத்த சில நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் பூச்சொரிந்து ஆசிர்வதிக்க சுதாவைக் கைப்பிடித்தான்.திருமணம் நடந்தது.

பத்து ரூபாய் நோட்டைச் சுமந்தபடியே சிவகுருவுக்குப் பத்து வருடம் ஓடி விட்டது. தாம்பதியத்தில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் பிறந்தும் ஒன்றும் மாறவில்லை.சுதாவாலும் எதுவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

“சுதா...உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு. இன் பாக்ட் ஐ லவ் யூ சுதா!’

ராஜேஷ் புரிந்த புன்னகையும் கண்களில் தேக்கி இருந்த காதலும் அன்று ரொம்ப களையாகக் காட்டியது அவனை.அடுத்த தெருவாசிதான் ”ராஜேஷ்.இஸ் எ வெரி நைஸ் பாய்” என்று தோழி அர்ச்சனா அடிக்கடிச் சொல்லுவாள்.

சுதா ரொம்ப கட்டுபடுத்திக்கொண்டு“சாரி...! ராஜேஷ்.இது ஒத்து வராது.நான் எங்க வீடல பாக்கற பையனத்தான் மேரேஜ் பண்ணுவேன்..” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அவனை அன்றே மறந்தாள்.

ராஜேஷ் இன்றும் நினைவில் வந்து போனான்.


                                       முற்றும்

ரகசிய தோழி தீபாவுக்கு ...!

இரவு மணி 11.00. நிலா FM ரேடியோ 101.25 . வரப்போகும் நிகழ்ச்சிக்கேற்றார் போல் இசையும் அந்தரங்கமாய் ஒலித்தது.

தீபா இந்த நிகழ்ச்சியின் செல்ல ஸ்டார். காரணம் அவளின் குரல்.ரொம்பவும் சினேகமானது. இந்த நிகழ்ச்சிக்கு base வாய்சில் பரிவோடு பேசுவது கேட்பவர்களின் மனதை லேசாக்கிவிடும்.

அடுத்த முக்கியமான காரணம் FM தொகுப்பாளினிக்கே உரித்தான பாசாங்குத்தனம் இல்லை.தன் சொந்தப் பிரச்சனைகள் போல் அணுகுவாள்.இதனால் நேயர்களுக்கு செல்லமாகிப்போனாள்.

”சந்தோஷத்த யார்கிட்டயாவது ஷேர் பண்ணினால் அது டபுளாகும். அதே மாதிரி துக்கத்த ஷேர் பண்ணிக்கிட்டா பாதியாக குறையும்னு சொல்வாங்க.அதேதான் இந்த புரோகிராம்மின் நோக்கமும். உங்களுடைய ரகசியமான விஷயங்களை என்னோட தயக்கமில்லாம ஒரு பிரண்ட்லியா ஷேர் பண்ணிக்கிறீங்க.அதற்கு மில்லியன் தேங்கஸ் சொல்லிட்டு இன்னிக்கு புரோகிராம்ம ஆரம்பிக்கிறேன்”

”இன்னிக்கி என்னோட”ரகசிய தோழி தீபாவுக்கு அன்புடன்” நிகழ்ச்சிக்கு நுங்கம்பாக்கத்திலிருந்து அரவிந்த் என்பவர் கடிதம் எழுதி இருக்காரு.அவரு என்ன சொல்ராருன்னு இப்போ பாக்கலாம்”

ரகசிய தோழி தீபாவுக்கு,

என் அந்தரங்கத்தை யாரிடமாவது கொட்டவேண்டும்.அதுவும் ஒரு மூன்றாவது மனுஷியிடம். கேட்பதற்கு நீ ஒருத்தி இருக்கிறாய் என்றதுமே மனதில் ஒரு ஆறுதல்.புலம்பலில் ஒரு வித self pity இருக்கும் .அதை எனக்காகப்பொறுத்துக்கொள்.அதுதான் உண்மை.நான் ஒரு தப்பும் செய்யவில்லை.

கொட்டுவதால் பாரம் குறைந்துவிடும் என நம்புகிறேன்.சரி விஷயத்திற்கு வருகிறேன்.

நான் (பொது துறை) அலுவலகத்தில் வேலையில் இருந்தேன்.என் துறை சம்பந்தமாகத்தான் உமாவும் என் அலுவலகத்திற்கு அடிக்கடி வருவாள். அவள் வேறு ஒரு தனியார் நிறுவனம்.

அலுவலக சம்பந்தமாக interact செய்ய என்ற பெயரில் அடிக்கடி சந்தித்தோம்.என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.கிறங்கிப்போய் காதலில் விழுந்தாள்.
ஒருத்திக்கு என்னைப் பிடித்துப்போயிற்று என்ற மிதப்புலேயே நானும் கிறங்கிப்போய் அதே காதலில் குஷியாக விழுந்தேன்.

அன்று முதல் பூமி புதிதாக சுற்றத்தொடங்கியது.

அவளை அப்படி லவ் பண்ணினேன்.தினமும் போனில் பேச விட்டால் என்னனோ மாதிரி இருக்கும்.. மேரேஜ்னா அவளைத்தான் என்று நிச்சயமே செய்துவிட்டேன்.
அவளைப் போல் இன்னொருத்தி கிடைப்பாளா?கடவுளாக போட்ட முடிச்சு என்று தினமும் ஒரு முறையாவது  சாமிபுத்திப் போட்டுக்கொள்வேன் படுப்பதற்கு முன்.

ரகசியமாக சந்தித்தோம்.அவளின் i10 காரின் கலரை நான்தான் செலக்ட் செய்தேன். அதில் ஊர் சுற்றினோம்.காதல் சினிமா பாட்டுக்கள் எல்லாம் ரொம்ப முக்கியமாகப்பட்டு பிடித்துப்போயிற்று. கல்யாணம்,ஹனிமூன்,குழந்தைகள் என எதிர்காலத்தையும் பிளான் செய்தோம்.மொத்தத்தில் 24/7 குஷியாகவே இருந்தோம்.(ஹாய்...தீபா ! எழுத எழுத ப்ரெஷர் குறைந்து மனசு லேசாகிறது).

ஆனால் அவளின் ரிச்னெஸ் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது.

அருகாமை  தந்த அவள் வாசனை ஒரு கட்டத்தில்  காமமாக மாறியது.அவளுக்கும் அதே பீலிங்க்தான்.அவள் காட்டிக்கொள்ளவில்லை.திருமணம் தவிர வேற வடிகால் இல்லை.திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.அவள் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.எனக்கு புதிராக இருந்தது.

அடுத்த சில மாதங்களில் சந்திப்பு குறைந்தது.செல்லிலும் தொடர்பு குறைய ஆரம்பித்தது. பல முறை வலிய போய் காதல் பாராட்டினேன்.அவள் கண்டுகொள்ளவில்லை. அவளின் போக்கு  என்னை ஷாக் ஆக்கியது.

அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்ற நினைப்பு  அடி வயிற்றில் புளியை கரைத்தது.ஒரு கட்டத்தில் செல் நம்பரும் மாற்றி விட்டாள்.கம்பெனியையும் விட்டு விட்டாள்.அவளை டிரேஸ் செய்யவே முடியவில்லை.மனம் நொ்ந்து போனேன் .

இனி வரும் காலத்தை எப்படி ஓட்டப்போகிறேன் தீபா?.ஒன்றும் புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் தீபா .கிடைக்கமாட்டாள் என்கிறது என் உள்மனசு தீபா.

உமா என்னை ஏன் மறந்தாள் தோழி தீபா?

அன்புடன்,

அரவிந்த்
நுங்கம்பாக்கம்

படித்து முடித்ததும் மூட் அவுட ஆனாள் தீபா.ஒருவாறு
சமாளித்து அரவிந்தனுக்காக, தன் பரிவான குரலில் பத்து நிமிடங்கள் ஆறுதலாகப்  பேசினாள்.அவளை மறந்து புது வாழ்க்கை தொடங்குமாறு தேற்றினாள்.

தான் பேசியது அரவிந்த் கண் முழித்துக் கேட்டிருப்பானா?வாட் அபொவுட் உமா?சான்ஸே இல்லை.

(இந்த ஒருவருடத்தில் இதுதான் பெஸ்ட் என்று அலுவலகத்தில் மறு நாள எல்லோரும் பாராட்டினார்கள்)

புரோகிராம் முடிந்தாலும் அரவிந்தின் கடிதம் மனதை போட்டு உலுக்கத்தான் செய்தது.அவனைப்போய் பார்க்கலாமா? அலுவலகத்தில் இதற்கு அனுமதி இல்லை.ஏன் உமா ஏமாற்றினாள்.குழம்பியபடியே மறுநாள் ஏழு ஆறு மணிக்குத்தான் தூக்கம் வந்தது தீபாவுக்கு.

அடுத்த நாள் மதியம் 1.00.தீபாவுக்கு பொது தொலைபேசியில் இருந்து போன் வந்தது.

“வணக்கம். ஐ ஆம் உமா. ஆர் யூ தீபா அஃப் நிலா FM 101.25? "

"வணக்கம். எஸ் உமா. யூ ஆர் ரைட்...நீங்க அந்த அரவிந்த்.....?

”ஆமாம்... அத பத்தி பேசனும்.நீங்க தனியா வர முடியுமா?”

 “ஒகே”

”கண்டிப்பா தனியாத்தான் வரணும்.அப்பத்தான் ப்ரீயா பேசலாம்”

“சத்தியமா”

மிகுந்த சந்தோஷமும் அதே சமயம் ஒரு ஒரத்தில் கிலியுமாக மனதில் ஓடியது. உமா அட்ரஸ் சொன்னாள்.அது அரவிந்த் அட்ரஸ். அரவிந்த் உமா குரலில் பேசுகிறானா?ஏன் தனியாக வரச் சொல்கிறாள்.போலியா?வேறு ஏதாவது நெட்வொர்க்கா?இது புது அனுபவமா இருக்கே?

ஹாண்ட்பாக்கில் பெப்பர் ஸ்பரே,மற்ற தற்காப்பு சாதனங்கள் எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டாள்.புது கணவன் மணி வண்ணனைத் துணைக்குஅழைத்துக்கொண்டாள்.கணவனிடம் மேலோட்டமாகத்தான் விஷயத்தைச் சொல்லி இருந்தாள்.

காரில் கிளம்பினார்கள். அரவந்தனின் கடிதம் போகும் வழியெல்லாம் படுத்தி எடுத்தது.

கணவனை காரோடு ஒர் இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு அந்த வீட்டை நெருங்கினாள்.தனி வீடானாலும் அழகாக இருந்தது.சூடிதாரில் ஒரு பெண் நின்றிருந்தாள்.அவள்தான் உமாவா? பயத்தில் உடம்பு சற்று உதறியது.

 ”ஹாய்...தீபா!”

“ ஹாய் உமா!”

நட்பாகச் சிரித்து கையை பிடித்துக்கொண்டாள்.பார்த்ததும் பிடித்துப்போயிற்று.இப்படித்தான் அரவிந்தனையும் கவர்ந்திருப்பாளோ?

மாடிக்கு அழைத்துக்கொண்டுபோனாள்.நுழைந்த்தும் மல்லிகைப்பூ வாசனை கிறங்கடித்தது.அது பெட்ரூம்.உட்கார வைத்துவிட்டு உள்ளே போனாள்.அறை சுத்தமாக இருந்தது.தனக்காக அவசரமாக சுத்தம் செய்த மாதிரி தெரியவில்லை.விலை உயர்ந்த style SPA படுக்கை.ஏசி அணைக்கப்பட்டு பேஃன் ஓடிக்கொண்டிருந்த்து.அவள் தன் குரலைக் கேட்கும் மியூசிக் சிஸ்டம் எங்கே?

சிறிது நேரம் ஓடியது.உமா எங்கே?ஆள் அரவமே இல்லை .ஒரு கெஸ்டை வெயிட் பண்ண வைத்துவிட்டு....லூசாக இருப்பாளோ?எதற்கு பெட்ரூமில் சந்திக்க வேண்டும்?

ஹாண்ட் பேக்கில் இருந்து பெப்பர் ஸ்ப்ரேயை  கட்டிலில் வைத்து ஹாண்ட் பேக்கால் மூடி மறைத்தாள்.

யோசனையை கலைத்தது கொலுசு சத்தம்..அவள்தான்.முதலில் பார்க்கும்போது கொலுசு இல்லையே? மெலிசான ஹவுஸ்கோட்டில்இருந்தாள்.கை, கழுத்து பகுதிகள் வெண்மை நிறத்தில் பளிரென அடித்தது.மேல் உள் ஆடைகள் அரசல் புரசலாக தெரிந்தது.தலையில் கோணல்மானலாக மல்லிகைப்பூவைச் சொருகி இருந்தாள்.ஒரு ஆணை கணத்தில் விழ்த்தக்கூடிய நிலையில் தோற்றமளித்தாள்.

இப்படியா  ஒரு விருந்தாளியை சந்திப்பாள்?அதுவும் ஹவுஸ்கோட் கணுக்காலுக்கு மேல்தான் இருநதது. இட் இஸ் டூ பேட் உமா...!

புன்னைகைத்தபடியே ஹாண்ட் பேக்கில் கைவிட்டு செல்லை எடுத்தாள். தன் கணவனின் நம்பரை அழுத்த ரெடியாக செட் செய்து உள்ளம் கையில் வைத்துக்கொண்டாள்.

வேறு சில அறிமுகத்திற்கு பின் லெமன் ஜூஸ் குடித்து பேச்சு ஆரம்பம் ஆனாது.பக்குவமாகத்தான் பேசுகிறாள்.தெளிவும் இருந்தது.நார்மல்தான்.

தீபாவுக்கு  பயம் போய் சகஜமானாள்.

”நாந்தான் அரவிந்த்....”உமா சிரித்தபடி சொன்னாள்.

”அப்படியா?” சற்று அதிர்ச்சியாகி அவளைப் உற்றுப்பார்த்தாள்,

“சாரி..டு ஆஸ்க் யூ..! ஆர் யூ  அ டிரான்ஸ்ஜெண்டர்?(திருநங்கை)

“இல்ல தீபா. நா ஒரு நார்மல் பொண்ணுதான்” மெலிதாக சிரித்தாள்.

“ஜஸ்ட் தெரிஞ்சுகலாம்னுதான்...சாரி”

தான் கேட்டதை உமா ரொம்ப அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

"நாந்தான் அரவிந்தன்ர பேர்ல எழுதினேன்.ஆனா காதல்ல ஏமாந்துபோனது நான்”

”ஓ.. ரியல்லி உமா! அன்பிலிவபுள்!.....ஏன் அப்படி?”

”அவன் ஏமாந்தான்னா எப்படி நொந்து எழுதுவான்னு ஒரு பீலிங்.ஒரு பொண்ணு புலம்பினா ரொட்டீனா போய்டும.அதான்...ரொமப சாரி தீபா.குழந்தத்தனமா பண்ணிட்டேனோ...ஒரு வேகம்தான் ரீசன்”

ஒரு  மணி நேரம் பேச்சு ஓடியது. தீபா தன் வழக்கமான FM சினேக குரலில்  ஆறுதல் சொன்னாள்.

”தீபா...உன்னோட குரல் ....so cute.... I love it...தீபா.நைண்டி பர்செண்ட் ரிலிவுட்”

”தாங்கஸ் உமா” சொல்லி தொடர்ந்தாள் “இப்ப ஓகேதானே...அதுலேந்து வெளில வந்திட்ட இல்ல.இது மாதிரி ஏமாந்தா யாராலேயும் தாங்க முடியாது.இட் இஸ் ட்ரூ.எனக்கு  இதோட வலி தெரியும் ”

“ஆல் மோஸ்ட் வந்தாச்சு. அவன பாத்து ”ஏண்டா இப்படின்னு”டீசண்டா கேட்கணும்னு ஆச. ஆனா முடியல..”

”ஆனது ஆகிவிட்டது.நீ பழச மறந்துட்டு மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா லைஃபல செட்டில் ஆயிடு.”

”அந்த முடிவுக்கு வந்து ஒரு வாரம் ஆயிடுச்சி.சீக்கிரம் மேரேஜ்.டும்..டும்..டும்”

“ஓ கிரேட்..!.மேரேஜ்ஜுக்கு கட்டாயம் வருவேன்.கிளம்பரேன்.”

 “கட்டாயம் வாங்க.இப்ப நீங்க தனியா வரலைன்னு தெரியும்.கார்ல.....?”

“எஸ்...என் ஹஸ்பெண்டுதான் வெயிட் பண்றாரு”

“எதுக்கு அவ்வளவு தூரம் நடக்கனும். அவரு செல்லுல கூப்பிடுங்க?’

“வேணாங்க.... நான் நடந்தே போய்டுரேன்....”

”தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

”உமா....அவரு வந்த இன்னும்  உன்னோட டைம்தான் வேஸ்ட் ஆகும்”

“தீபா ...ப்ளீஸ்... கால் ஹிம்”

எப்படி இந்த கவர்ச்சி உடையில்?அதுவும் தன் கணவனை பார்க்கத் துடிக்கிறாள்?சரியான லூசா?இட் இஸ் டூ பேட் உமா...!வேண்டா வெறுப்பாக செல்லில் அழைக்க மணிவண்ணனும்  வந்தான்.தீபா அறிமுகப்படுத்தினாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு கிளம்பினார்கள்.உமாவின் மேல் சொல்ல முடியாத மனத்தாங்களுடன்தான் தீபா வெளியேறினாள்.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.


 Uma  Weds Aravind

"உமா...கில்லாடியா இருப்பா போல!அவனேயே கண்டுபிடிச்சு கைப்பிடிச்சுட்டாளே” மணிவண்ணன்

”காதல்ன்னு விழுந்துட்டான்.அவளை ஒர் அளவுக்கு இப்படியும் அப்படியுமாக அனுபவித்து இருக்கிறான். ஒவரா ”காட்ட” ஆரம்பிச்சுவுடனே இது நமக்கு சரி வராதுன்னு தலை மறைவா ஆயிட்டு  மறுபடியும் மாட்டிக்கிட்டான்” தீபா

“ஒரு வேள  நாம உமாவை அன்னிக்குப் பாத்த போஸ்லயே போய் அரவிந்த மடக்கி இருப்பாளோ?” மணிவண்ணன்

                                         முற்றும்
 ______________________________________________________________

 இந்த கதைக்கு இன்னொரு முடிவு.

ஆறு மாதம் கழித்து உமாவின் திருமண அழைப்பிதழ் தீபாவுக்கு வந்தது. தீபா பிரித்தாள். ஆர்வமுடன் மணமகன் பெயரைப் பார்த்தாள்.

Uma  Weds Kishore

கிஷோர்! பலவாறு உறுதி செய்துக்கொண்டாள்.அதே கிஷோர்தான். விடுவிடுவென்று ஓடி தன் கணவனிடம் காட்டினாள்.

“உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணாத ஏமாத்தின கிஷோரா?”

”ஆமாம் ..!அதே கிஷோர்தான்”

                                                               முற்றும்

ஒரு காதல் கதை

துர்காதான் வந்துக்கொண்டிருந்தாள்.முகத்தைத் துப்பட்டாவால் இறுக மூடியிருந்தாள். கூலிங்கிளாஸ்  மட்டும் தெரிந்தது.ஸ்கூல் பெண்  போல் முகம் குட்டியாகத்  தென்பட்டது.

உலகத்திலேயே இவ்வளவு ரகசியமாக பயந்து பயந்து காதலிப்பது தங்களைத் தவிர வேறு யாருமில்லை. நினைப்பு மனதை வருத்தியது தாமுவுக்கு.அவனும் ஹெல்மெட் அணிந்திருந்தான்.வழக்கமான இடத்திற்குப்போனதும் அகற்றி விடுவான்.

ஒவ்வொரு சந்திப்பின்போதும் இப்படித்தான் நடக்கும்.

”வாழ்த்துக்கள்! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி”

துர்கா எதுவும் பேசவில்லை.கண்களில் நீர் கோத்திருந்தது.

”என்னடா துர்கா... கோபமா?”

”இல்ல தாமு.அச்சீவ்மெண்டுதான்....யாருக்கும் தெரியாம லவ் பண்ணி நாலு வருஷம் முடிச்சது ”சோகமாக சிரித்தாள்.



”என்னடா செய்யறது! பயப்படற விஷயத்தில ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கோம்.இதானாலேயே ரெண்டு பேருக்கும் லவ் ஜாஸ்தி.நீ பரவாயில்ல. நா தைரியமா இருக்கனும்னு டிரை பண்றேன் முடியல.”

“அனிவர்சரி ஏற ஏற  அதுவே அபசகுனம் மாதிரி ஓண்ணா சேருவமான்னு ஒரு நெகட்டீவ் பீலிங் வருது ”சரி விடு...ரொம்ப நேரமா வெயிட் பண்றீயா?”

பேச்சை மாற்றினாள். தாமு இவ்வாறு வருத்தப்படுவதை எப்போதும் ரசிக்க மாட்டாள் துர்கா.

“இப்படியே எவ்வளவு நாள் ஒட்டறது? வீட்ல சொல்லியே ஆக வேண்டும்” தாமு கோபப்பட்டான்.

”வீட நினச்சா உதறல் எடுக்குது.சத்தியமா அக்ரி ஆக மாட்டாங்க.ஏண்டா லவ் பண்ண ஆரம்பிச்சோம்னு தோணுது.தள்ளிப் போட்டதும் தப்பு”

“இங்கயும் அதே நெலமதான்.”
 
“மேஜிக் போல உஷ்ஷ்ஷ்ன்னு கையை ஆட்டி எல்லாரும் ஓகேயாகி..நம்ம மேரேஜ் முடிச்சு ஹாப்பி ஆயிடனும்....எப்படி இருக்கும்?”

“நல்லாத்தான் இருக்கும்” சிரித்தான். “இன்னும் எவ்வளவு நாள்தான் எந்த ஸ்டெப்பும் எடுககாம இப்படியே ஓட்ட போறோம். இந்த டாபிக்க எங்க அப்பாகிட்ட ஒபன் பண்ணலாம்னு இருக்கேன்.சும்மா மீட் பண்ணிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து ஏங்கிட்டு.... சே...கடுப்பா இருக்கு”

”கொஞ்சம் பொறு தாமு.அடுத்த வாரம் எங்கம்மா கிட்ட சொல்லாம்னு இருக்கேன்.அவங்கள கன்வீன்ஸ் பண்ணிட்டு அப்புறம்தான் என் அப்பா.டிசிஷன் எடுத்தே ஆகணும்.ஒருத்தர ஒருத்தர் எப்படி காதலிக்கிறோம்.இப்படி பூன போல துப்பட்டா மூடிகிட்டு லவ் பண்ணிட்டு இருந்தா தேறாது.”

சொன்ன வேகத்தில்  குரலில் நடுக்கம் தெரிந்தது.தாமு மூடு அவுட் ஆனான்.

”வேண்டாம்டா துர்கா. நான் பாத்துக்கிறேன்”

”இல்ல தாமு. நா எங்கம்மா கிட்ட பேசறேன்”

“உங்கம்மா ஒகே இல்லைன்னா?”

“என்ன பண்றதுன்னு புரியல”முகம் சுருங்கியது.

“ஏதாவது பண்ணியே ஆகனும்”

மேலும் இந்த சோகப்பேச்சை தொடர தாமுவுக்கு இஷ்டமில்லை.

வேறு திசையில் திரும்பியது. தாமு என்றுமில்லாத நாளாக  இன்று  ரொம்ப காதலுடன் பேச ஆரம்பித்தான். துர்காவும் பதிலுக்கு  பேசிக்கொண்டிருந்தாளே தவிர மனம் என்னவோ எப்படி அம்மாவிடம் சொல்வது என்று ஒத்திகைப் பார்த்தபடிதான் இருந்தது. இன்றைக்கு போய் இதை நான் இவனிடம் சொன்னேன் என்று நொந்துக்கொண்டாள்.பாவம் தாமு!

சந்திப்பு முடிந்து வீடு திரும்பினார்கள்.தாமுவை மிஸ் பண்ணக்கூடாது.வாசல் கேட் வரை ஒத்திகை நினைப்பு அவளே வாட்டி எடுத்தது.

இரண்டு நாள் கழித்து........

தாமுவின் செல் அடித்தது.துர்காதான்.ரொம்ப ரொம்ப அபூர்வமாகத்தான் செல்லுக்கு போன் செய்வாள். இன்று என்ன அவசரம்?

”சொல்லு துர்கா....நம்ம காதல் ஓகே ஆயிடிச்சா?”

”அத விட சீரியஸ் மேட்டர்...என்னோட எங்கர் சிஸ்டர்  அமுதா விட்டை விட்டு அவனோட லவ்வரோட  நேத்து நைட்டு ஓடிட்டா.அம்மா,அப்பா, பயங்கர அபசெட்.”

”உன் தங்கையா.... லவ்வா..நம்பவே முடியல”

“சரி...அப்பறம் பேசறேன்...” போனை வைத்துவிட்டாள்.

துர்கா மனம் உடைந்திருப்பாள்.எல்லாம் போச்சு.தாமு நொந்துப்போனான்.

அப்புறம் பேசுகிறேன் என்றவள் பேசவே இல்லை.

அடுத்த மூன்று மாதம் கழித்து துர்காவின் திருமணத்திற்கு சென்றான் தாமு.மண்டபத்தின்  ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டான்.

முஹூர்த்தம் முடிந்தது.

”கட்டாயம் சாப்பிட்டுதான் போகணும்.”
 
பெண் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தான் துர்கா தங்கை ஜாடையில்!அமுதாவா?

“ஓகே..  தாங்க்ஸ்....சாப்பிட்டுதான் போவேன்”

  அமுதாதான  என்பதை உறுதி செய்ய பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்தான்.

“ஆமாங்க...! துர்கா தங்கச்சிதான்.வீட்டைவிட்டு ஓடி வேற ஜாதிகாரனோட ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடிச்சி.இவங்க பேரன்ட்ஸ் எதுக்கோ பயந்துகிட்டு இதோட அக்காவுக்கும் இந்த கல்யாணத்த அர்ஜ்ண்டா நடத்திட்டாங்க. அதுவும் பயந்துகினு ஓகேன்னுடிச்சு.பத்து நாள் முன்னதான் அமுதாவும் அவ புருசனும் பேரண்ட்ஸ ஒரு மாதிரி சமாதானப்படுத்திட்டாங்க.அவங்கள ஏத்துகிட்டு தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க.”

அமுதாவை ஒரு முறைப்  பார்க்க வேண்டும்போல் இருந்தது.எழுந்து நின்று திருமண மேடையைப் பார்த்தான்.


                                               முற்றும்

1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை

(திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை.சம்பவங்கள் கற்பனையே)
 
அந்த வீட்டின் ஹாலில் இருந்த கனி அண்ட் சன்ஸ் மஞ்சள் பூத்த டயல்( பெரிய) கடியாரத்தில் ”டங்..டங்..டங்..டங்..” பெண்டுலம்  நான்கு முறை இப்படியும் அப்படியும் மெதுவாக தள்ளாடி நான்கு என்று காட்டியது. திலகவதி   தன் கொண்டையை சரி செய்து தலைப்புப் போர்த்தியபடி  கவலையோடு  வாசலுக்கு வந்தாள்.

கல்லூரியிலிருந்து மகள் வசந்தி இன்னும் வரவில்லை.இன்றோடு நான்காவது நாள் இப்படி வருவது.காரணம் கேட்டால் “ஸ்பெஷல் கிளாஸ்” என்பாள். எப்போதும் காலையில் சொல்ல மாட்டாள்.துளிர்விட்டு போய் விட்டது.

வசந்தி வரும்போது மணி 5.30.

“வெளக்கு வைக்கிற நேரம் தெரியுமில்ல?”திலகவதி முறைத்தாள்.




“இன்னிக்கு 5B பஸ்காரன் ஸ்டாப்புல் நிக்காத போயிட்டான்.அடுத்த ரெண்டும் பிரேக்டெளன். அதான் லேட்ம்மா.அப்பாகிட்ட சொல்லிடாதே.பொலி போட்டுவாரு”

வசந்தி லேட்டாக வருவதற்குக் காரணம் இருக்கிறது.



ஒரு வாரத்திற்கு முன் ........

காலேஜ் விட்டு வந்ததும் முதல் வேலையாக  பாட்டனி நோட்டிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்தாள். பாத்ரூமுக்குச் சென்றாள்.படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள வசந்தி,

உன் வீட்டு அடுத்த தெருவில்  இருக்கும் சீதாபதி காதலுடன் எழுதும் கடிதம்.நான் நந்தனம் ஜென்ட்ஸ் காலேஜில் B.A.(Arts)  மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்.

உன்னை போன மாதம் முதன்முதலாக  குமரன் பட்டாணிக் கடை வாசலில் பார்த்தேன். புத்தங்களை மார்போடு அணைத்தவாறு வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டே  பிரெண்டுடன் நடந்த அழகைக் கண்ணதாசன்தான் வர்ணிக்க வேண்டும்.அதுவும் பின்னலை முன்பக்கம்  ஸ்டைலாக விட்டபடி.

கண்டவுடன்  காதல் கொண்டுவிட்டேன்.அன்றிலிருந்து இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன்.எங்கு பார்த்தாலும் உன் முகமே தெரிகிறது.

என்னையும் ஓரக்கண்ணால் தினமும் பார்க்கிறாய்.ஆனால்  பார்க்காதது போல் பாசாங்கு செய்கிறாய்.உன் கூட பேச வேண்டும்.உன் சம்மதம் தெரிய வேண்டும்.உனக்காக “ஆட்டின்” போட்ட கர்சீப்பும் ஒரு மோதிரமும் வாங்கி பரிசாக கொடுக்க வாங்கி வைத்துள்ளேன்.அதுவும் உனக்குப் பிடித்த அலிமா  பேன்சி கவரிங்  கடையில்.

என் காதலை ஏற்றுக்கொண்டு பதில் கடிதம் எழுது வசந்தி(உச்சரிக்கும்போது நாக்கில் தேன் சொட்டுகிறது). கடிதம் எழுத பயமாக இருந்தால்  நாளை அல்லது மறு நாள்  என்னைக் கடக்கும் போது உன் பேனாவையோ அல்லது புத்தகத்தையோ கிழே தவற விட்டு பாசாங்கு செய்.நான் புரிந்துக்கொள்கிறேன்.

என்னை ஏமாற்றிவிடாதே வசந்தி.நீஇல்லாம என்னால் வாழ முடியாது.

என்றும் காதலுடன்
சீதாபதி

கடிதத்தைச் சுக்கு நூறாக கிழித்து  வென்னீர் பாய்லரில் போட்டாள்.

சீதாபதியை ஏமாற்றாமல் ஆர்வத்துடன் புத்தகத்தைத் தவற விட்டு காதலிக்க ஆரம்பித்தாள்.இவர்கள் காதல் இப்படித்தான் ஆரம்பித்து பல மாசம் தொடர்ந்தது.


                                               __________________

”சார்.. தந்தி” வாசலில் தந்தி சிப்பந்தி (காதில் பென்சில் சொருகியபடி)குரல் கொடுத்தான்.பரபரப்புடன் வாங்கி பிரித்தார் பூரணலிங்கம் (வசந்தியின் அப்பா).

”என்ன விஷயம்? யாராவது.....?”திலகவதி பதற்றமானாள்.

”நல்ல விஷயம். என் தங்கச்சி மவன் பூபதி மெட்ராசுக்கு நாளைக்கு வரானாம்.பின்னி மில்ஸ்ல அப்ரண்டிஸ்ஸா செலக்ட் ஆகி இருக்கானாம்.பழம் நழுவி பாலுல விழுந்த மாதிரிதான். வர தைல இவனுக்கும் வசந்திக்கும் தடபுடலா கல்யாணத்த முடிச்சிடலாம்”.

”முருகா...! பூபதியா? அவனோட கிருதாவும் மீசையும் ரவுடி போல.எப்ப பாரு இங்கிலீஷ்காரன் போல சிவிங்கம் மென்னுட்டு இருப்பன். ஊதாரி..ஊர்சுத்தின்னு வேற கேள்விப்பட்டேன்.”

”ஓடற பாம்ப நடு செண்டர்ல மிதிக்கற வயசு.அப்படி இப்படிதான் இருப்பான்.வசந்தி இவன இடுப்புல முடிஞ்சிடுவா.அவ அழகுல மயங்கி இவன் பொட்டிப்பாம்பா அடங்கிடுவான்”

“வேண்டாங்க...டெல்லிலே ஒரு வரன்.ஒரே பையன்.பிடிப்பு போக மாசம் 500 சம்பளம்.பிக்கல் பிடுங்கல் கிடையாது.சீர்வரிசையா ஆறு பவுன் நகை கைல மூவாயிரமும். மெட்ராசுல கல்யாணத்த பண்ணி வைக்க ஒன்னும் அப்ஜெக்‌ஷன் இல்லையாம்.”

“எனக்கு தெரியும்டி...நீ போய் வேலய பாரு” உருமினார்.

வசந்தி அடிவயிறு பகீரென்றது.கூடிய விரைவில் தன் காதலை தைரியமாக் அப்பாவிடம் சொல்லலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.இப்போது சொன்னால்கொன்னே போட்டுவிடுவாரே?

மறு நாள் எல்லா விஷயத்தையும் சீதாபதியிடம் சொல்லி  திருநீர் மலையில் ரகசிய திருமணம் ஏற்பாடு செய்ய சொன்னாள்.தெய்வம் நம்மை கை விடாது என்றும் பொறுமை காக்குமாறு  வசந்திக்கு ஆறுதல் சொன்னான்.
                    __________________


ஒரு வாரம்  கழித்து  ஒரு நாள்......

பூரண லிங்கம் ஒரு நகைப்பெட்டியை திறந்து திலகவதியிடம் காட்டினார்.திலகவதி முகத்தில் வைரத்தின் ”டால்”அடித்தது. அது அதிக வேலைப்பாடுடன் கூடிய வைர நெக்லஸ்.

”இது என் பால்ய சினேகிதன் வையாபுரி கொடுத்தான்.அவனோட பரம்பரை சொத்து.அவன் குடும்பத்தோடு காசி ராமேஸ்வரம்னு பல ஊருக்கு தீர்த்த யாத்திர போறான்.ஒரு மாசம் ஆகும். அதுவர நம்ம பத்திரமா வச்சிட்டு திருப்பி கொடுக்கனும்.நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை”

”மதிப்பு என்ன இருக்கும்”

“ ஒரு லட்ச ரூபாய்”

திலகவதி வாய் பிளந்தாள்.

அதே சமயத்தில் பூபதியும் வாய் பிளந்தான் .பெட்ரூமின் பக்கத்தில் ஒளிந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மனதில் திட்டம் தீட்டினான். இதை அபகரித்து கிளப் டான்ஸர் காதலி ரீட்டாவுடன் சிங்கப்பூரில் செட்டில்ஆகி விட வேண்டும்.பின்னி மில்ஸ் லேத்தில் யார் மாரடிப்பது. போவதற்கு  முன் வசந்தியின் கற்பையும் சூறையாடி விட வேண்டும்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.....

எல்லோரும் குடும்பத்தோடு  ஹாலில் இருக்க பூபதி நமட்டு சிரிப்போடு வசந்தியை நோக்கி வந்தான்.

”மாமா.. உங்க பொண்ணு காலேஜிக்குத்தான் போறாளா? இல்லேன்னா ஊர் சுத்த போறாளா?எனக்கு மனைவிய வரவ பதிவிரதையா இருக்கனம்னு நான் ஆசப்படறேன் ” கள்ளத்தனமாகச் சிரித்தான்

“என்ன இது வாய் நீளுது.அடக்கிப்பேசு...” பூர்ண லிங்கம்

“ நேத்து இவ  ஒரு பையனோட இடுப்பல கைவச்சிட்டு லாம்பி ஸ்கூட்டர்ல வுட்லெண்ட்ஸ் டிரைவ் இன்லேந்து வரதப் பார்தேன். காலேஜ்ஜ அங்க மாத்திட்டாங்களா?”

”ஆமாம.அவரை நான் காதலிக்கிறேன்”

 கேட்டவுடன் பூரண லிங்கம் எரிமலையானார்.

”நம்ம பரம்பரைக்கே அவமானத்த உண்டுபண்ணிட்டியே”

வீடு கலவரமானது.வசந்தி அப்பா முன் நின்று பேசக்கூடாது என்று உள்ளே தள்ளப்பட்டாள்.

வசந்தியின் படிப்பு அன்றோடு நிறுத்தப்பட்டது.கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
பூபதிதான் மணமகன்.இவனைக் கட்டிக்கொள்வதை விட தன்னை ஒரு பாழும் கிணற்றில் தள்ளச் சொல்லி கதறினாள் வசந்தி.யாரும் கேட்கவில்லை.

சீதாபதிக்கு  விஷயம் போயிற்று. ஆர்வத்தில் காதலித்து விட்டோம்.இப்போது என்ன செய்வது. அப்பா அம்மா இருவரும்  ஊரில் இல்லை.ஒன்றும் புரியாமல் கையைப் பிசைந்துக்கொண்டு நின்றான்.

அடுத்த இடி அவன் தலையில் விழுந்தது.

சீதாபதியின் “கெட்ட நடத்தை”யின் பேரில் காலேஜில்  டிசிப்பிளினரி ஆக்‌ஷன் எடுத்து அவனை சஸ்பெண்ட் செய்தார்கள். சோகத்தில் சீதாபதி தாடி வைத்து நடை பிணமானான்.வசந்தியை பார்க்க முடியாமல் தவித்தான்.

பூபதியை மணக்க வசந்தி சம்மதித்து விட்டதாக நண்பன் கோபால் மூலமாக தகவல் வந்தது.
சீதாபதி வாடிப்போனான்.


11-09-1970. திருமண நாள்.மண்டபம் நிரம்பி வழிந்தது.தாலி கட்ட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.பூபதி மாலையும் கழுத்துமாக திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்தான்.

மண்டபத்தின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது.அதிலிருந்து பூர்ண லிங்கம் நண்பர் வையாபுரி இறங்கினார்.

நுழைந்ததும்  நுழையாததுமாக லிங்கத்திடம் வைர நெக்லஸ்ஸை அதிகார தோரணையுடன் கேட்டார்.

 ”முதல்ல டிபன் சாப்பிடு வையாபுரி. முகூர்த்தம் முடியட்டும் தரேன்”

”இல்ல இப்பவே வேணும்” அடம்பிடித்தார்.

”என்னாச்சு இவருக்கு” புரியாமல் பூரணலிங்கம் நெக்லஸை வரவழைத்துக் கொடுத்தார்.

வாங்கிப்பார்த்த அடுத்த நிமிடம்....

” கல்யாணத்த நிறுத்து..?இது போலி நெக்லஸ்.பொண்ணு கல்யாணத்துக்கு  பணம் வேணும்னு வித்துட்டு போலிய என் தலைல கட்டி டிராமா போடறயா லிங்கம்.அசல் எங்க?”

 மண்டபமே அதிரும்படி கத்தினார் வையாபுரி.அதே சமயத்தில் சீதாபதி 120 மைல் வேகத்தில் தன் ஸ்கூட்டரில் ஒரு ஹைவேஸ்ஸில் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.



”போலியா? ஆண்டவன் மேல சத்தியமா சொல்றேன். எனக்கு ஒண்ணும் தெரியாது.”  தன் மார்ப்பைப் பிடித்தபடி மண்டப தூணில் சாய்ந்தார் லிங்கம்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் வாயடைத்துப்போய் அவரேயே  பார்த்தார்கள்.

“மறுபடியும் டிராமா போடறயா? இது போலிதான். இது என் பரம்பரை சொத்து. பணத்துக்கு ஈடு செய்ய முடியாது.இதுக்கு பிராயசித்தமா என் சகோதரி  மகன் கோபாலுக்கு உன் பொண்ண  இதே முகூர்த்தத்துல கட்டிக்கொடு. எனக்கு நெக்லஸ் வேணாம்”

”என்ன மாமா இது?யாரு இது கோபால்? என் மானம் போகுது” பூபதி கத்தினான்.

கோபாலா....?சீதாபதியின் உயிர் நண்பன்.வசந்தி விக்கித்து நின்றாள்.கண்கள் இருட்டி மயக்கம் வந்தது.

மண்டபம் அல்லோகல்லோகப்பட்டது.

“நீங்கதான் டிராமா போடறீங்க மிஸ்டர் வையாபுரி”மண்டப வாசலில் சீதாபதி இடுப்பில் ஸ்டைலாக கை வைத்தபடி.எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்து  அமைதியானார்கள்.

“இங்க என்னப்பா நடக்குது. ஒண்ணும் புரியல”கையில் அட்சதையும் பூக்களுமாக(உள்ளங்கை வேர்வை ) ஒரு முதியவர் தலையை ஆட்டிக்கொண்டே சத்தம் போட்டார்.

”சொல்றேன்”. சீதாபதி சொல்ல ஆரம்பித்தான்.

 ”வசந்திய நான் உயிருக்கு உயிரா காதலிச்சேன்.என் நண்பன்...மன்னிக்கவும்  துரோகியும் நான் காதலிப்பது தெரிந்தும் அவள் மேல ஆசைப்பட்டான்.அவள எப்படியாவது அடையனும்னு துடிச்சான்.இவன் போற மூணு சீட்டாட்ட கிளப்புக்கு பூபதியும் வருவான்.
ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒரு லட்ச ரூபா நெக்லஸ் பத்தியும் ரெண்டுபேருக்கும் தெரியும். வையாபுரி கோபால் அப்பா கிட்ட 3000 ரூபாய் வீடு கட்ட கடன் வாங்கி இருந்தாரு. திருப்பி தர வையாபுரிக்கு வருமானம் இல்ல.திட்டம் போட்டாங்க.பூபதி நெக்லஸ்ஸ திருடிட்டு போலிய வச்சுருவான்.கல்யாணத்த அன்னிக்கு வையாபுரி வந்து கேட்பறாரு.அப்ப இருக்காது. உடனே வசந்திய கட்டி வக்கச் சொல்வாரு.இக்கட்டான நிலமைல லிங்கம் கட்டி வச்சுடுவாரு.இவன் நெக்லஸ்ஸோட கள்ளக் காதலியுடன் சிங்கப்பூர் ஓடிடுவான்.இதுதான் திட்டம்” சொல்லிக்கொண்டிருக்கும் போது.......

”நண்பனாட நீ...ராஸ்கல்” லிங்கம் வையாபுரியின் சட்டையைப் பிடித்தார்.

“நில்லுங்க சார்.. இவன் உண்மையான வையாபுரி இல்ல.உண்மையான வையாபுரியை கோடெளன்ல கட்டிப்போட்டு வச்சிட்டாங்க” என்று சொல்லி வையாபுரியின் முகத்தில் இருந்த முகமூடியை உருவினான் சீதாபதி.

”இவன்  பழைய கேடி பைரவன்”

”டுமீல்” என்ற வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் சத்தம்.”யாரும் அசையாதீங்க” சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் சத்தம்போட்டபடி உள்ளே வந்தார்.பின்னால் போலீஸ்காரர்கள்.

” ஏய்.... 502.ஏய்.... 405 இவங்க மூணு பேரையும் விலங்கு போட்டு அரெஸ்ட் பண்ணு”

ஏட்டுக்கள் மூவருக்கும் விலங்குப் போட்டு முட்டி தள்ளிக்கொண்டுப்போய் ஜீப்பில் ஏற்றினார்கள்

”சரியான சமயத்தில வந்து எங்கள காப்பாத்தினீங்க. இருந்து சாப்பிட்டு போங்க” என்றார் லிங்கம். அவசரமாக ஒரு பந்தோபஸ்து டூட்டி இருப்பதாக் சொல்லி வீரபாண்டியன்
கிளம்பினார்.

உண்மையான வையாபுரியும் லிங்கமும் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.பார்த்தவர்கள் கண்கள் பனித்தன.

“தம்பி உன்னப் போல உத்தமன் இந்த உலகத்துல பாத்தது இல்ல.”நெகிழ்ந்தார்

அதே மேடையில் கல்லூரி பிரின்சிபாலும் உண்மைத் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“முகூர்த்தத்திற்கு நாழியாரது... யாரு மாப்பிள்ள....?”அய்யர் விசிறிக்கொண்டே கேட்டார்.

 ”இந்த தங்க கம்பிதான்.. மாப்பிள....என்ன மன்னிச்சுடுங்க மாப்பிள..”  பட்டு வேட்டி சட்டையை தாம்பளத்தில்  வைத்துக் கொடுத்தார்.வசந்தியின் கன்னம் சிவந்தது.

“நீங்க வயசுல எவ்வளவு பெரியவரு. நீங்க போய் இதெல்லாம் சொல்லிகிட்டு”

சீதாபதியின் ஒண்ணுவிட்ட பெரியப்பா ராமலிங்கம் மாப்பிள்ளை சார்பில் நின்று தாம்பளத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார்.

கொட்டு மேளம் கொட்டியது.

’மாங்கல்யம் தந்துனானே மம” அய்யர்  மந்திரம் ஓத   தலை குனிந்த வசந்தியின் கழுத்தில் தாலிக் கட்டினான் சீதாபதி. எல்லோரும் அட்சதை மற்றும் பூத் தூவி ஆசிர்வதித்தார்கள்.

                                     சுபம்

ஆவி கதை

செல்போன் மாதிரி என் பெயர் ரொம்பப் பொதுவானது. டைரக்டரியை எடுத்துப் பாருங்கள்; பத்து பக்கத்துக்கு என் பெயர் விதவிதமான இனிஷியல்களில் அடுக்கியிருக்கும். ஆனாலும் நான் வித்தியாசமானவன். நினைவு இருக்கும்போதே கேட்டுவிடுகிறேன், உங்களிடம் செல்போன் இருக்கிறதா? மெசேஜ் அடிக்கத் தெரியுமா? நல்லது. உங்கள் செல்போனில் Prediction ஆன் செய்துவிட்டு 5477 என்று டைப் அடித்துப் பாருங்கள். என்ன வருகிறது? Lips என்று வருதா? இதற்கு மாற்று வார்த்தை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்கள் சொல்போனில் கீழே இருக்கும் * பட்டனை அழுத்துங்கள். Kiss என்று வருகிறதா? இந்த இரண்டு வார்த்தைகளும் வரும்வரை கதையை மேற்கொண்டு படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் கடைசியில் கதை புரியாது.
இப்பொழுது எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிடுகிறேன் – என்னால் ஆவிகளுடன் பேச முடியும். உடனே, ஆவிகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சுத்த புருடா என்று எல்லோரும் சொல்லுவதைப் போல நீங்களும் சொல்லாதீர்கள். எனக்கும் நம்பிக்கை கிடையாது, மாலாபுரம் செல்லும் வரை.
திருச்சியிலிருந்து கும்பகோணம் போகும் வழியில் ஏதோ ஒரு வளைவான ரூட்டில் பாபநாசம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டில் மாலாபுரம் என்றால் வழி காண்பிப்பார்கள். ஆனால் வர மாட்டார்கள். தாத்தா, பாட்டி மாலாபுரம். மொத்த எண்ணிக்கையே பத்து வீடுகளுக்குள் இருக்கும் அக்ரஹாரத்தில் ஐந்தாவது வீட்டில் இருந்தார்கள். நான் ஒன்பதாம் வகுப்புத் தேர்வு அப்போதுதான் எழுதியிருந்தேன்.
“ஏண்டா உனக்கு லீவு தானே? தாத்தா, பாட்டியை ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாயேன். அவாளுக்கும் வயசாயிடுத்து,” என்று அம்மா நச்சரித்ததால், ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கும்பகோணம் பஸ் கிளம்பும் திருச்சி பஸ் ஸ்டாண்டில் மூன்று மணிக்கு ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். பஸ்ஸை ஸ்டார்ட் செய்த டிரைவர் ஏனோ அதைக் கிளப்ப மனம் இல்லாமல் இன்ஜினை உறுமவிட்டுக்கொண்டே இருந்தார்.
ஜன்னல் பக்கம், “எதை எடுத்தாலும் ஐந்து ரூபாய்…”
“வேண்டாம்பா.”
“தம்பி வாங்கிக்கோங்க, பஸ்ஸுல படிச்சுகிட்டு போகலாம். அஞ்சு ரூவா… அஞ்சு ரூவா… “
“வேண்டாம்பா,” என்று திரும்பவும் சொல்லும் போது விற்றவர் கையில் வைத்திருந்த புத்தகத்தில் ‘ஹெல்மெட் – திகில் பேய் கதை’ என்று ரத்தச் சிவப்பில் எழுதியிருந்தது. கீழே ஹெல்மெட் மண்டை ஓடு மாதிரி படம் வேறு. ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன்.
தஞ்சாவூர் வருவதற்கு முன்பு கதையைப் படித்து முடித்துவிட்டேன். படித்த கதையை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
மூன்று நண்பர்கள் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அதில் ஒருவன் சரியான பயந்தாங்கொள்ளி. மற்ற இருவரும் அவனை எப்போதும் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் இந்த இருவரும் ஒய்ஜா பலகை வைத்து ஆவியுடன் பேச வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். வீட்டில் காலியான ஓர் அட்டைப் பெட்டியைப் பிரித்து சதுரப் பலகை மாதிரி செய்து மூன்று பக்கங்களில் A,B,C,D, … என்று Z வரைக்கும் எழுதி, மீதிப் பக்கத்தில் 0-9 வரை எண்கள் எழுதி, நடுவில் ஒரு வட்டம் போட்டு, பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, லைட்டை அணைத்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளரை நடுவில் கவிழ்த்துவைத்து இரண்டு பேரும் எதிரெதிர்பக்கம் உட்கார்ந்துகொண்டு, தங்கள் ஆள்காட்டி விரலை கவிழ்த்த டம்ளரில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு… பயந்தாங்கொள்ளி நண்பன் எவ்வளவு தடுத்தும் இவர்கள் கேட்கவில்லை…. முதல் கேள்வியைக் கேட்க ஆரம்பிக்கிறார்கள்…
“நீங்கள் யார்?”
அன்று ஒன்றும் நடக்கவில்லை.
அடுத்த நாள், காலேஜ் விட்டு வந்தவுடன் இவர்கள் இதே மாதிரி செட்டப் செய்து திரும்பவும் ஆவியுடன் பேச முற்படுவதைப் பார்த்த ப.கொ.நண்பன் திகிலுடன் வெளியே ஓடிவிட்டான்.
இரவு 10 மணி.
வீட்டில் அந்த நண்பர்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள். விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு, சின்னதாக மெழுகுவத்தி ஏற்றி, கொஞ்சம் பயமாகவும் ஆர்வமாகவும்…
“ஆவியே, வந்துவிட்டீர்களா?” என்று ஒருவன் கேட்க ஒன்றும் நடக்கவில்லை.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கொஞ்சம் நேரம் சும்மா இருக்க தீடீர் என்று அவர்கள் விரல் ‘Y – E – S” என்ற வரிசையில் எழுத்துகளில் சென்று நிற்கிறது. நடுங்கிவிட்டார்கள்.
அடுத்தக் கேள்வி..
“உங்க வயசு என்ன?” என்று அடுத்தவன் கேட்கிறன்.
அவர்கள் கை “2 – 8″ என்ற எண்களில் போய் நிற்கிறது.
உங்களுக்குப் பிடித்த நிறம், நடிகை என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள்.
“நீங்கள் எப்போது இறந்து போனீர்கள்?” என்று கேட்க, “J – U – S – T – N – O – W” என்று பதில் வந்ததும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.
“எப்படி இறந்து போனீர்கள்?”
“H – E – L – M – E – T” என்று பதில் வர அப்போது தான் மெழுகுவத்தி வெளிச்சத்தில் டேபிள் மீது ஹெல்மெட் இருப்பதைப் பார்க்கிறார்கள். ப.கொ.நண்பனின் ஹெல்மெட். பய அவசரத்தில் அதைப் போடாமல் போய்விட்டான்.
தஞ்சாவூர் வந்தவுடன் ஒரு லெமன் சோடா குடித்துவிட்டு கதையின் நினைப்பில் கும்பகோணத்துக்குப் பயணிக்கும்போது, அந்தச் சம்பவம் நடந்தது. பாபநாசம் பக்கம் வரும்போது பஸ் டயர் பஞ்சர் ஆகி எல்லோரும் கீழே இறங்கிவிடப்பட்டோம். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அடுத்த பஸ்ஸுக்குக் காத்திருந்து, வராமல், கொஞ்சம் இருட்டிவிட்டது. லேசான தூறல் வேறு வரத் தொடங்கியது. ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி பாபநாசம் வரும் போது பெரிய மழை. மணி இரவு 7 இருக்கும். பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ, ரிக் ஷா என்று எதுவும் இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தானே, நடந்தே சென்றுவிடலாம் என்று நடக்கத் தொடங்கினேன். இரண்டு பக்கமும் இருட்டைப் பழிக்கும் இருட்டு. மழைக்கு சில சுவர்க்கோழிகள் சப்தம் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது.
அப்போதுதான் பேய்க்கதை படித்திருந்ததால் மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. வழியில் ஒரு பெரிய அரச மரம்; அதன் ‘சல சல′ சத்தம் எனக்குப் பயமாக இருந்தது. வேகமாக நடந்து சென்றபோது இரண்டு சமாதி மேடுகள் கண்ணில் பட்டன. எல்லா தவளையும் அன்று ஓவர்டைம் செய்துக்கொண்டு இருந்தது. பயம் இன்னும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் தூரத்தில் சின்னதாக ஒரு விளக்கு தெரிவதை திகிலுடன் பார்த்தேன். விளக்கு பக்கத்தில் வர, யாரோ சைக்கிளில் எதிரே போனார். ஏனோ, அவர் காலால்தான் ஓட்டுகிறாரா என்று பார்க்கத் தோன்றியது. ரோட்டுக்கு இரண்டு பக்கமும் பார்க்காமல் வேகமாகக் கடந்து சென்றேன். வீட்டை அடைந்தபோது பாட்டி, “ஏண்டா இவ்வளவு லேட்டு?” என்று விசாரித்தார்.
“பஸ்… பஞ்சர்” என்று சொல்லநினைத்தும் குரல் வெளிவரவில்லை. சாப்பிட்டபின் தூக்கமும் வரவில்லை.
“பாட்டி, மெழுகுவத்தி எங்க இருக்கு?”
“ரேழியில இருக்கு… கரண்டு தான் இருக்கே, மெழுகுவத்தி எதுக்கு?” கேள்விக்கு பதில் சொல்லாமல் ரேழியில் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.
ராத்திரி எல்லோரும் தூங்கியபின், அந்த கதையில் வருவது போல ஒய்ஜா போர்டு ஒன்றைத் தயார் செய்தேன்.
பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
ouija-board
“நிஜமா நீ இருக்கியா?” என்று மெலிதாகக் கேட்டேன்
கை மெதுவாக நகரத் தொடங்கியது. “Y – E – S” என்ற எழுத்தில் போய் நின்றது.
எனக்கு ரொம்பப் பயமாகிவிட்டது. அதற்குப் பிறகு கொஞ்சம் தைரியத்தை வந்ததும், “சாப்பிட்டாச்சா?”
“C-U-R-D R-I-C-E”
நீ ஆணா ?
“N-O”
போன்ற சில சம்பாஷணைகள் எங்களுக்குள் நடந்தது.
விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன் என் பேனா தொலைந்துபோனது. எல்லா இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. சரி ஆவியைக் கேட்கலாம் என்று அன்று இரவு ஏற்பாடாக அமர்ந்தேன்.
“என் பேனா கிடைக்குமா?”
“Y-E-S”
“எங்க இருக்கு?”
“R-A-M-K-Y” என்று பதில் வர, அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் ராம்கி பையைத் தேடிய போது என் பேனா கிடைத்தது.
அதற்குப் பிறகு ஆவிகளுடன் பேசுவது எனக்கு ஏதோ பொழுதுபோக்கு மாதிரி ஆகிவிட்டது. இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நகம் கடிப்பதைப் போல, விடமுடியவில்லை.
திருமணம் ஆன பிறகு ஒரு நாள் என் மனைவி நான் ஒய்ஜா போர்டு வைத்துப் பேசிக்கொண்டு இருக்கும் போது பார்த்தவள், அலறிவிட்டாள்.
“அப்பா!… உங்க மாப்ள பேய் பிசாசுகளோட பேசறார்ப்பா” என்ற போனில் மனைவி பதறிய ஒற்றை வார்த்தைக்கு மாமியார் மாமனார் குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு வண்டி வண்டியாக தர வேண்டிய சீர்களை அட்வைஸாக தந்துவிட்டு போனார்கள். திரும்பத் திருட்டுத்தனமாக மற்றொரு நாள் மனைவியிடம் மாட்டிக்கொண்டு, டைவர்ஸ் வரை போய்விட்டது. மறுநாள் நான் அலுவலகத்துக்குப் போயிருக்கும் போது பீரோ மீது இருந்த ஒய்ஜா போர்டை பழைய பேப்பர்காரனுக்குப் போட்டுவிட்டாள்.
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்,’ என்பார்கள் அது மாதிரி இந்தப் பழக்கம் என்னை விட்டுப் போகவில்லை. ஒய்ஜா போர்டுகள் இல்லாமலே இப்பொழுதெல்லாம் என்னால் ஆவிகளுடன் பேசமுடிந்தது. காலையில் நியூஸ் பேப்பரில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டால் பேனா எழுத்துகளை நோக்கிப் போகும். அதிலும் பக்கத்தில் தண்ணீருக்கு பதில் காப்பி இருந்தால் போதும். அவ்வளவு ஏன், பொழுது போகாமல் இப்பொழுதெல்லாம் செல்போனை கையில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்டால் மெசேஜ் அடிப்பது மாதிரி பதில் வருகிறது என்றால் பாருங்களேன்.
இப்பொழுது உங்களிடம் சொன்ன இந்தக் கதையை சொல்வனத்துக்கு அனுப்பப் போகிறேன்.
“என் கதை பிரசுரம் ஆகுமா-ஆகாதா?” என்று கேட்டுவிட்டு செல்போனைக் கையில் எடுத்து பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
என் விரல் “73532833″ என்ற எண்ணை டைப் அடிக்கிறது.
அந்த வார்த்தை என்ன என்று உங்க செல்போனில் பாருங்கள். (நீங்கள் எதிர்பார்த்த வார்த்தை வரவில்லை என்றால் எதற்கும் ஒருமுறை * பட்டனை அழுத்திவிட்டு பாருங்கள்.)
( குறிப்பு: “73532833″ என்ற எண்ணுக்கு Selected அல்லது Rejected என்ற வார்த்தை வரும் )

ஐ லவ் யூ கீதாலஷ்மி

”சாயந்தரம் மூணு மணிக்கு ப்ரோகிராம் ஆரம்பிக்கும்.
மறக்காத வந்துரு.சும்மா பேசி அசத்து”சித்தார்த்

”ஓகேடா..கிளம்பிட்டு இருக்கேன்.கட்டாயமா வரேன்.”அரவிந்த்.

அரவிந்த் அழைப்பை கட் செய்து முடித்து அடுத்த நிமிடத்தில் மீண்டும் அழைப்பு.மீண்டும் நண்பன் சித்தார்த்.

“டேய் மன்மதா.. நிறைய பொண்ணுங்க கலந்துக்கிற டாக்‌ஷோ.மிஸ் பண்ணாத”

“ஓகே.. ஓகே...” கட் செய்துவிட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.

“என்னாடா ஒரே ஸ்மைலியாக இருக்க..” அரவிந்த் அம்மா

” நான் மன்மதனாம்”

“ஆமாண்டா.இன்னிக்கு இந்த புது ஷர்ட்டும் பேண்டும்.ஒரு தூக்கு தூக்குது வழக்கத்தவிட”

கண்ணாடியில் பார்த்தான்.உடை கச்சிதமாக பொருந்தி வந்தது.அப்பாவைப் போல் அகல தோள்கள்.அதே உயரம்.சட்டையை மீறி வெளியே துருத்திக்
கொண்டிருக்கும் முடி.அடர்த்தி மீசை.ஆண்தனமான முகம்.அதிரும் மெட்டாலிக் குரல்.

இந்தத் தோற்றத்திற்காகவே கல்லூரி காலத்தில் நிறைய பெண்கள் துரத்தினார்கள்.புன்னகையுடன் எல்லோரையும் கடந்தான்.இதற்காகவே மிச்சம் மீதி பெண்களும் துரத்தினார்கள்.தலையில் எந்தவித கீரிடமோ குறுகுறுப்போ இல்லாமல்தான் கடந்தான்.


எதற்காக துரத்தினார்களோ அதில் இவனுக்கு ஆர்வமில்லை.பட்டுக்கொண்டதும் இல்லை.தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றபடி இருந்தான்.அவனை அப்நார்மல் என்றார்கள்.படிப்பில் ரொம்ப கவனமாக இருந்தான்.உண்மையாகவே ஒரு மாணவனாக படிக்கவும் செய்தான்.

கடைசிவரை அதே புன்னகையுடன் எல்லா பெண்களையும் கடந்து கல்லூரிக்கு வெளியே வந்து நல்ல சம்பளத்தில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
__________________________________

சித்தார்த் அழைத்த இடத்தை நோக்கி காரை செலுத்தினான்.

காலரி போல் இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.டாக் ஷோ ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது.உள்ளே நுழைந்த கீதாலஷ்மியும் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

முதல் பார்வையிலேயே அவனை ரொம்ப பிடித்துப்போனதும் நெருங்கி உடகார்ந்தாள். வலிய பேசினாலும் அவன் ஒரிரு வார்த்தைகள்தான் பேசினான்.வந்திருந்த ஆண்களும் பெண்களும் இவர்களேயே அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அதையும் பாக்கியமாக ரசித்தாள்.

டாக் ஷோ ஆரம்பித்தது.தன் சைடு வாதங்களை அருமையாக பேசினான்.இவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது கீதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. கைத்தட்டல் வாங்கும்போதெல்லாம் அவள் இவனின் உள்ளங்கையால் தன் உள்ளங்கையால் தட்டினாள்.

நேரம் கூட கூட வாதங்களும் பிரதிவாதங்களும் பெரிதான சிரிப்புக்களும் கைத்தட்டல்களும் கத்தல்களும் காதில் விழாமல் சுருங்கி ஒரு புள்ளியாக கீதாலஷ்மி அரவிந்தை காதலிக்கத் தொடங்கினாள்.அவனின் உடல் மொழியும் தனக்கு இணையாக இருப்பதாக நினைத்து மீண்டும் பூரித்தாள்.

டாக் ஷோ முடிந்ததும் அதே பூரிப்பில்......

“ ஏய் அரவிந்த்.நாம ஜெயிச்சத கொண்டாடலாம். ஹாவ் டின்னர் அண்ட் கோ” ரொம்ப உரிமையாக.

”சாரி... கீதாலஷ்மி..இன்னொரு நாள். பட் ஐ ஹேட் வெரி நைஸ் டைம் வித் யூ”

பல வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக தன் முழுப்பெயரைச் சொல்லி அரவிந்த்துதான் கூப்பிடுகிறான்.அதில் திளைத்துக்கொண்டிருந்தபோது அவன் கிளம்பிவிட்டான்.”பை” சொன்னது கூட காதில் விழவில்லை.

அப்படி கூப்பிடாமல் இருந்திருந்தால் தான் விடாப்பிடியாக அவனை அழைத்திருப்பேன்.யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தாள்.டாக்‌ஷோவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக கருதினாள்.
_______________

அடுத்த ஒரு வாரத்தில் அவளிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் அரவிந்தைத் தாக்கியபடி இருந்தது.எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தான்.இவனை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.

அவனிமிருந்து ஒரு மறு காதல் மறுமொழியும் இல்லை இருந்தாலும் எல்லாம் பொதுவாக இருந்தது.

கீதாலஷ்மியும் ஒன்றும் புரியாமல் தவித்தாள். காதலிக்கப்படுவதற்கு  இவ்வளவு கஷ்டபடவேண்டியது புது அனுபவமாக இருந்து ஹிம்சையானாள்.வெளியேறுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள்.ஏன் அந்த டாக் ஷோக்கு போனோம் என்று முதல் முதலாக நொந்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக பிரான்ஸ் சென்றாள்.இவளின் குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.ஆனால் முன்போல அவ்வளவு  தீவிரம் இல்லை.குறையவும் செய்தது.அவனும் அதே சமயத்தில் அவன் ஆபீஸ் விஷயமாக வெளிநாடு சென்றான்.

கிட்டத்தட்ட நான்குமாத இடைவெளிக்கு பிறகு ஒரு நாள்---------

“அரவிந்த் ..திஸ் இஸ் கீதா... கீதாலஷ்மி. எப்படி இருக்கே?”

“ நல்லா இருக்கேன். கீதாலஷ்மி. நீ?”

“நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரு ஷிப்ட் ஆயிட்டேன். இப்ப சென்னைல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்கேன்.நான் உங்கிட்ட பேசனும். தி இஸ் அபொட் மை மேரேஜ்”

“வாழ்த்துக்கள் கீதா..”

“தாங்கஸ்.நேர்ல வா.. சொல்றேன்.கட்டாயம் வந்தே ஆகணும்”

கீதாலஷ்மிக்கு விரைவில் திருமணம்! போனை வைத்தவுடன் மனசு கனத்தது.வழக்கமான புன்னகை எங்கே போயிற்று? பார்த்தே ஆக வேண்டும் என்று மனசு வாட்டி எடுத்தது.

ஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ். ரூம் நம்பர் 218..

”எஸ் அரவிந்த்.. கம் இன்”  உள்ளே நுழைந்தான்.

“இஸ் இட் ஓகே” தன் உடையைக் காட்டிக் கேட்டாள்.

” நோ பிராபளம்” என்று சொல்லி கையில் கொண்டுவந்திருந்த பூங்கொத்தைக் கொடுத்து”வாழ்த்துக்கள்” என்றான்.பதிலுக்கு சிரித்து வாங்கிக்கொண்டாள்.

முதன்முதலாக அவளை உற்று நோக்குகிறான்.

லூசான கட்டம் போட்ட டி ஷர்ட்டும் அதன் கிழே தொளதொள பேண்டும் அணிந்து பளிச்சென்று இருந்தாள்.கையில் ஏதோ பேஷன் வளையல்கள். ஒரு காலில் மட்டும் மெல்லிதான கொலுசு.காலில் ரூம் செருப்பு.இருந்தாலும் கண்ணியமான தோற்றம்.


நடக்கப்போகும் அவளின் திருமணத்தை விவரத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக சொன்னாள்.கணவன் அவர்கள் குடும்ப போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.


அவள் தன் பின்னணி படித்த காலேஜ் குடும்பம் எல்லாவற்றையும் முதல்முறையாகப் பகிர்ந்துக்கொண்டாள்.பிரான்ஸ் பற்றி விவரித்தாள்.தன் பல வித போட்டோக்களை காட்டி நிறைய ஜோக் அடித்தாள். பேச்சில் நேர்மை இருந்தது.விகல்பம் இல்லாமல் பேசினாள்.நிறைய சிரித்தாள்.தன் காதல் தோற்றதுப்பற்றி முகத்திலோ பேச்சிலோ எந்தவித தடயமும் இல்லை,

இதையெல்லாம் இவ்வளவு நாள் கவனிக்க தவறியது மனதை ரணமாக்கியது.

பேச்சின் இடையே தான் அடிக்கடி உதிர்த்த வழக்கமான புன்னகைகள் கூட அதன் வீரியத்தை இழந்துவிட்டதாக நினைத்தான்.

பேச்சின் முடிந்து கிளம்பும்போது அவளை ரொம்ப பிடித்துப்போயிருந்தது. மனதிற்குள் சொல்லிக்கொண்டான் -

“ஐ லவ் யூ கீதாலஷ்மி”


                        முற்றும்


Wednesday, 24 August 2011

உன் நினைவுகள்!

உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..

கடற்கரையில் ..   
பூங்காவில் ..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்

உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

Wednesday, 17 August 2011

A Story about Onsite...!

Every Software Engineer should read this.

  A Story about Onsite...!
One fine day, Vivek's PL Bhatia asks him whether he has any time for a small
meeting. Vivek obviously has time and so the two go to a conference
room. Bhatia then clears his throat and says "Vivek, there is an on-site
requirement. It is in Covina , Los Angeles . It is for six months. I can
suggest your name. Do you have any problems?" 
Vivek cannot believe his ears. Of course why should any one have problems
going to the Sam land. "Of course no Bhatia.. I have no
problems." he says.
Bhatia looks at him very kindly and says "You better draw up your personal
plans with your wife and let me know in a day or two" That's when Vivek
remembers that he has a wife. Then it strikes him that there is a himalayan
problem in front of him. Shobana is working in Wipro. She is in
the middle of a project in which she is a moduleleader. She cannot leave it
all and come to Covina with Vivek. On the otherhand it will be cruel on
Vivek's part to leave her here and go to Covina for more than half a year. Moreover,
they have just been married. Vivek can stay back. But one day he has to go..
He cannot stay back in India indefinitely. Project requirements are too
demanding. Shobana can resign Wipro and accompany Vivek. But what is the
guarantee that she would find such a nice job in such a nice company after they come
back from Covina ? So Shobana and Vivek discuss this issue. They reluctantly agree to get separated for six months.
Vivek hugs Shobana in the airport and says "I will be BACK" in a typical
Arnold Scharzegger tone and then boards Delta Airways leaving Shobana in
tears. In Covina Vivek gets lots of work and his stay gets extended by  two
more months. The days and months move very slowly. Vivek starts counting
even minutes.
During this period, Shobana's PL Ashish Mehta calls her one day and asks
her whether she has any time for a small meeting. Shobana wonders what
that meeting is.. They go to the conference room and Mehta tells her
about a great on-site requirement in Berlin , Germany for their customer.
"It is for six months and you are most suited person for this. I am
going to suggest your name. Do you have any problems?" Mehta asks her.
Shobana gets excited.. Berlin ! She has never been out of India . So she
instantly nods her head. Mehta then smiles and says "Okay discuss with
your hubby and let me know in a day or two"
That's when Shobana gets the gravity of the situation. It will be two
months before Vivek can come home..... By the time Shobana will have left to
Berlinfor six months. Shobana cannot decline this as this is an
important assignment. That night Vivek spends hundred dollars on
telephone to discuss this matter with Shobana. Finally they decide to go
ahead. Shobana breaks down in the phone and Vivek breaks down thinking
about his phone bill. And then Shobana leaves to Berlin .
One month after that,Vivek comes back to India . Then Shobana calls him
almost everyday and they discuss about all petty things on the phone.
Shobana applies for a loan to clear her telephone bills. Vivek gets into
a new project which is not yet started. His PL Prateek Ray calls him one
day and says that he has to go to Toledo Ohio for the requirement analysis
of that project. Vivek frantically says no. Shobana is arriving next month. He doesn't
want to miss her. But Ray assures him that the work is only for one month and
that he would be back before Shobana comes to India . Thus Vivek flies to
Toledo Ohio and gets into the requirement analysis of the new project.
That's when he comes to know how difficult it is to retrieve information
from the users. You can design a system the user wants only when the
user knows what he wants. Vivek gets baffled by the questions his users
put..
"Do you think I need those fields "GMG_TYPE_HJHJ_TW" and
"Auto_level_ind"?What are they by the way?" The requirements analysis
stage continues for three full months at this pace. Shobana comes to India one
month after that. And she tells her PL that she doesn't want anymore
on-site assignments. "I understand" says Mehta and she desperately waits for Vivek to come back to India . It has already been two months over a year
since they last met. Vivek then gets the role of an on-site co-ordinator
for this customer. He calls Shobana that night and they really don't
know what to do. Shobana offers to resign her job and join him in Toledo . But
she is getting 21 grand per month in Indiaand Vivek doesn't want to lose
that. "Two more months Shobana and I promise I will be back" Shobana
retorts back, "There is no solution for this problem." Vivek gets
surprised. "What are you talking about?" he asks her. Shobana fights back her tears. "As long as I am in Wipro I will be getting a lot of on-site opportunities. Even if I
decline all of them, what about you? You also work for a software
company and there you need to go abroad almost once every quarter.
I cannot accompany you as you don't want me to resign my job here. Does
that mean we have to stay like this forever? Vivek! I love you and I
don't know how I spent fifteen months without even seeing you once. I
may not recognize you also if you come in front of me now... Tell me Vivek,
is there a solution for this problem?" Vivek doesn't speak anything for a
moment. He then realizes the truth in her sentences. It is a neverending
problem.
But what about the 20 grand she is getting per month?
"Vivek, is money everything? Can't we comfortably live with what you are
getting? Please Vivek, try to understand the situation" Shobana breaks
down. Vivek is still undecided. He married a software engineer with a
hope that with two incomes he would have a good deal of money to plan their
future."Let us face the reality, Vivek" Shobana says, "How much are you
paying for the phone calls now? More than 20 grand per month.
If I am with you there will your phone bill be so astronomical? Just
tell me one thing. Won't you be happy having me there with you?" Shobana
slowly turns hysterical. Vivek gets into the crux of the situation. It is true.
He has been spending around 600 to 700 dollars per month on India calls...
that is far more than what Shobana is getting then. He thinks and
thinks..for two days he does nothing else but thinking. Finally he decides that
he should have Shobana with him all the time from then onwards at any cost.
Shobana gladly prepares the resignation letter and submits it. Her PL
smiles and says "You've made the right decision Shobana..
 congratulations  for the bold step. I understand your problems. Anyway! you have a three
months notice period here, right? We have a one month assignment in
Singapore ....."
MORAL : No software professional should marry another software professional.... unless one of them is ready to resign.