Tuesday, 26 April 2011

The Game oF Hearts

மதிய நேரம் வகுப்பறையில் ...
"MATHS CLASS" நடந்து கொண்டிருக்கிறது
சுவரில் இருக்கும் கரும்பலகையில்
ஆசிரியரின் சாக்பீஸ் கணக்கை எழுதி செல்கிறது
கரும் பலகையிலிருந்து பனிமலை போல
சுனாம்புத் துகள்கள் உதிர்கின்றன
மதிய சூரியனின் ஒளி..
உன் வரிசை இருக்கையில் கீற்றாக விழுகிறது
எழுதி செல்லும் என் கைகளின் வழியே
என் இருக்கைக்கு இணையான வரிசையில் இருக்கும்
உன்னை பார்கிறேன்..

குனிவதும் கரும்பலகை நோக்கி நிமிர்வதுமாக
தீவிரமாக எழுதுகிறாய்
குனியும்பொது முன் விழும் கூந்தல் இலைகள்
தன்பங்குக்கு காற்றில் எதோ எழுத்துகின்றன
காதோரம் என் பார்வை உறுத்த திரும்புகிறாய்
குனிந்துகொள்கிறேன்
மர இருகையின்மேல் பேனாவால்
கிறுக்க துவங்குகிறேன்
எழுதாமல் விட்ட வரியை
அசிரியரின் Duster அழித்துச் செல்கிறது
பார்த்து எழுத
நண்பனின் நோட்டை நோக்கி திரும்புகிறேன்எழுதி செல்லும் கைகளின் நடுவே
பக்கவாட்டில் உன் முகம்
என்னை பார்த்து குனிகிறது

பரீச்சை எழுதும் போதெல்லாம்
என் இருக்கைக்கு முன் வரிசையில் உன் இருக்கை
நீ விடை தெரியாமல் விளிப்பதை பார்த்து
எனக்கு தெரிந்த விடையும் மறந்தது


.லேபுக்கு போகும் சிறிய பாதையில்
இருவரும் பார்த்துக்கொண்டோம்
இரண்டு இமைகள் நிமிரும்போதெல்லாம்
இரண்டு இமைகள் கவிழ்கின்றன...

இருவரும் சில வார்த்தைகள் கூட பேசியதில்லை
முகம் பார்த்து புன்னகைததில்லை
ஒருவருக்கொருவர் பார்கையில்
குனிவதை தவிர வேறு எதுவும்
இருந்ததே இல்லை எப்போதும்

கல்லூரி புகைப்படங்களை பார்கையில்
எல்லோர் முகங்களின் மீதும் நகர்ந்து
உன் முகத்தில் தேங்குகிறது என் பார்வை

நெடும் பயன்களில் ,பொது இடங்களில்
எதிர் வர கூடுமென
இப்போதும் உன் சாயலை தேடுகின்றேன்

காலியான வகுப்பறை முழுக்க
இருக்கையில் பேனாவால் கிறுக்கப்படும்
மென் கதைகளை
வகுப்பறைக்குள் ரகசியமாய் வந்து
வாசித்து சிரிக்கிறது சூரியன்
இப்போதும்........

No comments:

Post a Comment