Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, 7 September 2011

காதல் தோல்வி.....

(காதலில் தோல்வியுற்ற ஒருவனின் கடைசி நிமிடங்கள் இப்படிதான் இருக்குமோ?... )



பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

உன் பின்னல் நடந்தால்
போகும் வழியின் தூரம் தெரியாது
இன்று நடத்தல்
காதல் வலியின் துயரம் தெரியவைகிறாய்......

விழிகளை கசக்கி
கண்ணீரை நிறுத்தி
கைகளை துடைக்கிறேன் சிறுபிள்ளையென...

காரணம் தேடி
காற்றோடு பேசி
கண்ணீர் துளிகள் மரணிகிறது தினம்.,,

காதல் கடலில் நீந்தி
கிணற்று தவளையானது
என் காதலும்....

சாலை ஓரம்
தடுக்கி விழும் போதெல்லாம்
போதையை விட
உன் நினைவே என்னை
தள்ளிவிட்டதாய் சந்தோசம் கொள்கிறது....

ஆல மர விழுதும்
அது தரும் நிழலும்
இரவானால் துணையாகாது உணர்ந்தேன்
நீயில்லாமல் நான் மட்டும்
நிலவில்லா நீல வானமாய்....

என்னை எப்படி மறந்தாய்
அந்த ரகசியத்தை சொல்லிவிட்டு
நானும் அப்படியே
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்....

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரனாய்....

நீ மட்டும் இறந்துவிடதே
நாயில்லாமல் நீ சொலியது
இப்படி என்னை தினம் கொல்லதானா.?..

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

வானும் மண்ணும்
நீரும் சாட்சி
மறந்து போன
நீயும் சாட்சி....

காதல் என்ற
சொல்லும் சாட்சி
கடைசியாய் மீதமுள்ள உன்
நினைவும் சாட்சி
என் காதல் உண்மை....

இதோ மறந்து போன காதலி
திறந்துவிடுகிறாள் கல்லறை கதவை
நானும் என் காதலும்
கைகோர்த்து செல்ல....

Wednesday, 17 August 2011

என் நிழலும்..நீயும்..

ஒரு நொடி ..
எனை நீ கடப்பதற்காக..
ஒரு நாள் முழுதும்..காத்திருந்தேன்..
நீ எனை கடந்த பின்..
என் நிழல் கூட காத்திருக்கவில்லை..
அதுவும்..என் மனம் போலே..உந்தன் பின்னே!!!
முதலில்..
என் மனதை..என்னிடம்..இருந்து பிரித்தாய்..
என் எண்ணங்களை..உனதாக்கினாய்..
உனக்கானாதாய்..மட்டுமே மாற்றினாய்..
நினைவுகள் முழுதும்..நீ மட்டுமானாய்..
இன்று..
என் நிழல் பறித்தாய்....
ஏனோ...உயிரை ...விட்டு வைத்தாய்..
அதுவும்..உனை பற்றி..பற்றற்று போயிற்று..
நான் இருந்ததன் அடையாளாமாய்..
இந்த கவிதையாவது..இருந்து விட்டு போகட்டுமே..!!!!

நாமும்..மரணமும்..

உன்னில்..நானும்..
என்னில்.. நீயும்..
எது நீ..எது நான்..
எது உன் ஆசை..எது என் விருப்பம்..
புவியில்..விழும்..நிழல்..உனதா..எனதா..??

இப்படி..நாமே..குழம்பியிருக்க
காலன்..வந்து
என் உயிரை..மட்டும் எப்படி பிரித்தறிவான்..

போடி...எனக்காய்..நீ சேர்த்து வைத்த..கண்ணீர்..
எல்லாம் வீணாய் ..போகும்....

பிரம்மன்..கணக்கு பொய்க்க..
வேண்டாம்..போ....!!

உனக்கு ஒரு நிமிடம்..முன்..
இறப்பேன்..
ஒரு நிமிடம்..தாண்டி..
தாமதித்து...விடாதே..
தவித்து..போவேன்!

Thursday, 11 August 2011

காதல் வந்த காலமெது…?


பெயர் தெரியாத பெண் குழந்தைகளையெல்லாம்
நான் உன் பெயர் சொல்லி அழைத்த போது தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட ஆண் குழந்தையை பெயர் சொல்லியழைக்க நீ தயங்கி நின்ற போதேனும் ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும் என் கண்ணைப் பார்த்து பேசும் நீ முதன் முதலாய் மண்ணைப் பார்த்துப் பேசும் போதாவது தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்த நீ கொஞ்சிக் கொஞ்சி பேச ஆரம்பித்த போது கூட நிகழ்ந்திருக்கலாம் அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின் விலகாத பார்வை சற்றே விலகி உன் வெட்கத்தில் விழுந்து முத்தத்தில் நனைந்த வேளையில் தானும் சேர்ந்தே நனைந்திருக்கலாம் நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள் இருக்கையில் என்னை மட்டும் உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது ஆயிரம் முறை நீஎன்னிடம் கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும் உனக்கு சொல்ல நினைத்து சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும் உயிர்க் காற்று என் உள்சுவாசம் மறுத்ததாய் இதுவரை என் நினைவில் இல்லையடி..................