Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Wednesday, 7 September 2011

காதல் பிரிவு !

நீ அழும் வேளைகளில் கோமாளி ஆனேன் நான் -
உன்னை இன்பமாக்க ..

ஆசைக்கு  எனை பயன்படுத்தி
இடையில் வெறும் எச்சமாக விட்டு சென்ற போது தான் உணர்ந்தேன் - நான்
கோமாளியின் கண்களும் நீர் சுரக்கும் என்பதை...

 நினைவுகள்

இரவின் ஆழம் பொருட்படுத்தாது இதயம் பகிர்ந்து கொண்ட
அந்நாள் நினைவுகள் இடைவிடாது வந்து செல்ல..

இறந்த கால நினைவுகளை தொலைக்க செல்கிறது என் மனம்,
இருளில் இருந்து மீளாமலே........

காதல் தோல்வி.....

(காதலில் தோல்வியுற்ற ஒருவனின் கடைசி நிமிடங்கள் இப்படிதான் இருக்குமோ?... )



பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

உன் பின்னல் நடந்தால்
போகும் வழியின் தூரம் தெரியாது
இன்று நடத்தல்
காதல் வலியின் துயரம் தெரியவைகிறாய்......

விழிகளை கசக்கி
கண்ணீரை நிறுத்தி
கைகளை துடைக்கிறேன் சிறுபிள்ளையென...

காரணம் தேடி
காற்றோடு பேசி
கண்ணீர் துளிகள் மரணிகிறது தினம்.,,

காதல் கடலில் நீந்தி
கிணற்று தவளையானது
என் காதலும்....

சாலை ஓரம்
தடுக்கி விழும் போதெல்லாம்
போதையை விட
உன் நினைவே என்னை
தள்ளிவிட்டதாய் சந்தோசம் கொள்கிறது....

ஆல மர விழுதும்
அது தரும் நிழலும்
இரவானால் துணையாகாது உணர்ந்தேன்
நீயில்லாமல் நான் மட்டும்
நிலவில்லா நீல வானமாய்....

என்னை எப்படி மறந்தாய்
அந்த ரகசியத்தை சொல்லிவிட்டு
நானும் அப்படியே
உன்னை மறக்க முயற்சிக்கிறேன்....

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரனாய்....

நீ மட்டும் இறந்துவிடதே
நாயில்லாமல் நீ சொலியது
இப்படி என்னை தினம் கொல்லதானா.?..

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

வானும் மண்ணும்
நீரும் சாட்சி
மறந்து போன
நீயும் சாட்சி....

காதல் என்ற
சொல்லும் சாட்சி
கடைசியாய் மீதமுள்ள உன்
நினைவும் சாட்சி
என் காதல் உண்மை....

இதோ மறந்து போன காதலி
திறந்துவிடுகிறாள் கல்லறை கதவை
நானும் என் காதலும்
கைகோர்த்து செல்ல....

Saturday, 3 September 2011

எப்படி உன்னை மறக்க முடியும்??..


நீ பேசிய வார்த்தைகள் எல்லாம்
பொய் என்று நான் உணர,,
வார்த்தைகள் மட்டும் அல்ல 

"காதலும் பொய்தான்" என்று 
உணர்த்திவிட்டாய்!!!...

உன்னை மறக்க ஒரு நொடி எண்ணினேன்!!..
அந்த ஒரு நொடிப்பொழுதும் 
உன்னை மட்டுமே நினைத்தேன்!!!..

நீ பேசிய வார்த்தை மொழிகளையே 
மறக்க முடியாதவன் 
எப்படி உன்னை மறக்க முடியும்??..

கண்மூடித்தனமாய் காதலித்தேன் 
கண்களைத்திறந்து பார்த்தபோது 
காணவில்லை அவளை!!..

என்னவளே...
தயவுசெய்து திரும்பி வராதே!!..
இழப்பதற்கு இன்னொரு இதயம் 

இல்லையடி என்னிடம்!!!..

சிரிக்க முடியாமல்!!!..

ஆண்டுகள் பல கடந்து
நாம் சந்தித்துக்கொண்ட போது..
நாம் பேசியது..

நீ நலமா?.. உன் கணவர் நலமா??...
உன் குழந்தைகள்???...
.
..   ,,
இப்படியாக இறுதியில் 
Take Care., உடம்பைப் பார்த்துகொள்!!..  என்றேன்

பிரியாவிடை கொடுக்க 
பிரியாமல் பிரிந்து சென்றாள்..
திரும்பி பார்த்தாள்.. ஏதோ தயக்கமாய்!!..

ஓ.. நானா...
நான் நல்லாகத்தான் இருக்கிறேன்...
பச்சையாக ஒரு பொய்...

தலையை மட்டும் ஆட்டினாள்
சிரிக்க முடியாமல்!!!..

கண்ணீர் கலந்த கனவுகளாய்

உன்னை 
எந்த அளவுக்கு பிடிக்கும் என 

எனக்கு தெரியாது...
 

ஆனால்..
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேற எதையும்
இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காது!!..


உனக்காக இந்த உலகத்தையே 
இழக்க காத்திருந்தேன்!!..

ஆனால் 

இந்த உலகத்திற்காக
என்னை இழந்து விட்டாய்.. 



பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன...
"கண்ணீர் கலந்த கனவுகளாய்"
 

பெண்ணின் வாசமும்... மோசமும்...


உனக்காக காத்திருந்த விழிகளில் 
பூத்திருப்பது புண்கள் மட்டுமே...
என் காதல் தான் நிறைவேறவில்லை 
உன்னை காதலித்தவன் என்ற 
நிறைவே போதும் எனக்கு...
பெண்ணின் வாசம் அறிந்தது உன்னால்...
பெண்ணின் மோசம் அறிந்ததும் உன்னால்...
போனதெல்லாம் போகட்டும்..
உன்னால் அழிந்தோர் 
பட்டியலில் என் பெயரும்!!!....

முற்றுப்பெறாத தற்கொலை...

பிரியமானவளே...
விழிகளால் என்னை விலை பேசியவளே..

விருப்பமே இல்லாத என் வாழ்க்கை 
வெறுப்பாகி போனது... 
பிடித்த நிறமோ கறுப்பாகி போனது...

மதுக்கிண்ணங்களில் என் மறு வாழ்வு..
வாழ்வாதாரமாய் நாம் வாழ்த்த நாட்கள்..
விழிகள் உருண்டும் உலகம் இருண்டதாய்..

அன்று உன் பார்வை பரிமாணத்தால் 
துடித்த என் உயிர்... 
துடிதுடித்துக் கொண்டிருக்கிறது இன்னும்...

ஒரு முற்றுப்பெறாத தற்கொலை 
உன்னை நான் இழந்தது..

சோகங்கள் சுகமானதுபோய்.. 
ஒவ்வொரு கணமும்... நரக ரணமாய்....
போதுமடி... போதும்.....போதுமடி...
இறப்பின் வலியை உணர்த்தியது போதுமடி...

கரை தேடும் அலைகளாய் 
இன்னும் என் காதல்... இறப்பை தேடி...

என்னவளே... 
வா... வந்து ஒரு கருணைக்கொலை செய்து விடு..
உடல் மண்ணுள் புதையட்டும்..
உயிர் உன்னில் புதையட்டும்!!!...

நோயும் நீதான்.. மருந்தும் நீதான்..

உன்னிடம் 
என்னோடு சேர்ந்து வாழக்கேட்டேன்!!! 
இப்படி என் 
மனதோடு மட்டும் வாழ்கிறாயே!!!!

நம் பிரிவை பற்றி தெரியாமல் 
வழக்கம்போல் என் கனவுகளில்
உன் நினைவுகள்!!!

இந்த காதல் நோயிக்கு 
காரணமும் நீதான்!!!!..
அதற்கான மருந்தும் நீதான்!!!

நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்

மனசு முழுதும் உன் ஞாபகங்கள்..
வேறு எதிலும் கவனம் இல்லை!!..

அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்..
எதையோ நினைத்து தனியாய் சிரிக்க
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்..

படிக்க சொன்னா எழுதுறேன்..
எழுத சொன்னா கிறுக்கிறேன்..
ஏதோ... பேருக்குத்தான் வேலை பார்க்கிறேன்..
எப்படியோ சமாளிக்கிறேன்..
.
.

ஆமா.. நான் இப்ப என்ன சொல்ல வந்தேன்!!...

ஒழிந்து போ


நம் வசந்த காலங்களை
என் கசந்த காலங்களோடு ஒப்பிடும் போது...
அது என் வாழ்வில் எவ்வளவு பெரிய பொற்காலம் என
இப்போதும் உள்ளே உணர்வுத் திரியில் ஒளிர்கிறது...

உன் நினைவுகள் எனக்குள் விழித்தெழுந்து
என்னையே எரித்துவிட்டு போய்விடுகிறது...
பஸ்பமாகி, சாம்பலாகிய பின்புதான்
இன்னொரு பிறவியாய் எனக்குள் எழுகிறேன்...

விட்டுச் சென்ற உன் காலடிச் சுவடுகளில்
கடைசியாய் நீ வெட்டிச்சென்ற
நிமிடங்கள்தான் என் நினைவுகளில்
சிவப்புக்கம்பளம் போர்த்துகிறது..

ஏன் எனக்குள் அடிக்கடி விழிக்கிறாய்...
எத்தனையோ நினைவுகள்
மறைந்து, மறந்து, மறத்து போன போது...
நீயும் அத்தோடு தொலைந்து போவாய் என்று எண்ணியிருந்தேன்...

ஆனால், நினைவுகளில் தொலைந்து போக
வேண்டியவைகள் தான் அதிகமாக வந்து
ஞாபக விளிம்புகளில் குடி கொண்டிருக்கின்றன...
அந்த விளிம்பு முழுவதும் உன்
கறுப்பு - வெள்ளை விழிப்பூக்கள் நிறைந்து வழிய..

"ஒழிந்து போ"என்று
எனக்கு நானே  சாபமிட்டு கொள்கிறேன்...
இதைவிட பெரிதாய் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

எப்படி முடிகிறது உன்னால்



எப்படி இருக்கின்றாய்
என்னைப் பிரிந்து
அழுகிறது மனம்
உன்னை நினைத்து

வலிகளை உன்னால் தாங்கிக்கொள்ள
முடிந்தது எப்படி?
இப்படி இருந்ததில்லை
ஒருநாளும் என் சொற்படி....

கவலைகளும் பனித்துளிபோலதான்
சிறிது நேரம் தங்கிக் கொள்வதினால்.........

நலமுடன் இருக்கின்றேன் என
மின்னலாய் ஒரு தடவை
வந்து சொல்லு
முழிக்கும் என் கண்கள்
நிம்மதி கொள்ளட்டும்.


உன்னை நேசித்தேன்
இல்லையில்லை சுவாசித்தேன்..

இருந்தும் உன் திருமண விழாவில்
நான் கலந்து கொள்ளவில்லை!!!...
ஏன் தெரியுமா??...
உன் திருமணவிழாவில் கலந்துகொண்டு
உன்னை வாழ்த்திவிட்டு போக
நீ என் வாழ்கையில் வந்தவள் இல்லை..
எனக்கு நீ வாழ்க்கையாய் இருந்தவள் !!!...





Friday, 2 September 2011

பொய்யான நிஜங்கள்


உனக்கு பொழுதுபோகவில்லையென
உன் பொழுதைப் போக்கதான்
ஒரு பொய்யான காதலை
என் பொழுதெல்லாம் வளர்த்தாயோ???

உன் பொய்யான காதலை மறக்கத்
தெரியாதவனின் காதல் தோல்விகளை
என் கண்ணீர் துளிகள் வரும்
நாட்களில் தொடர்ந்து எழுதும்!!!..

Tuesday, 30 August 2011

உன் நினைவுகள்!

குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?

நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!

எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'

இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?

காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?

பொல்லாதக் காதலால் வந்த  வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...

சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!

Wednesday, 24 August 2011

உன் நினைவுகள்!

உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..

கடற்கரையில் ..   
பூங்காவில் ..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்

உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

Wednesday, 17 August 2011

நாமும்..மரணமும்..

உன்னில்..நானும்..
என்னில்.. நீயும்..
எது நீ..எது நான்..
எது உன் ஆசை..எது என் விருப்பம்..
புவியில்..விழும்..நிழல்..உனதா..எனதா..??

இப்படி..நாமே..குழம்பியிருக்க
காலன்..வந்து
என் உயிரை..மட்டும் எப்படி பிரித்தறிவான்..

போடி...எனக்காய்..நீ சேர்த்து வைத்த..கண்ணீர்..
எல்லாம் வீணாய் ..போகும்....

பிரம்மன்..கணக்கு பொய்க்க..
வேண்டாம்..போ....!!

உனக்கு ஒரு நிமிடம்..முன்..
இறப்பேன்..
ஒரு நிமிடம்..தாண்டி..
தாமதித்து...விடாதே..
தவித்து..போவேன்!

Tuesday, 24 May 2011

காதல் கவிதைகள்


என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள் மேடையில்,
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,
'இல்லை., காதல்' என்றாள்... 

கண்ணீர் விட்டு அழுவது பிடிக்காது உனக்கு
அதனால்தான் கவிதை எழுதி அழுகிறேன்.. 


நலம் வாழ ...

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத்தாண்டி வளர்ந்ததைக்கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம், எதற்கிந்த சொகம் கிளியே..

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்........




உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ...
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு கொண்டு தங்கம் பூசி தோள் செய்தானோ

ஆனால்... பெண்ணே.... !
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ...

LittlE HeartS



காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதை கொடுக்கும்
போகப் போக தூக்கத்தைக் கெடுக்கும்...!
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழியோ வெளிச்சத்தில் குதிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் முடியும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை...
ஆலவிருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே நான் வாழ்வதே சுமையானதே...
மனமே நீ தூங்கி விடு... என்னை நினைவின்றித் தூங்க விடு!


காதல் தந்த நினைவுகளைக் கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதினாலே கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலே அவளை மறக்க முடியவில்லை..
உலை மூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையிலே பூக்களும் உண்டு..
காதலின் கையிலே கத்தியும் உண்டு...
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா....
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா..?