Thursday 29 September 2011

சுவாமி தேவானந்தா - நற் சிந்தனைகள்




இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக் கூடியவை. எல்லா இன்பங்களும் இறுதியில் துன்பத்தையே தரும்.

இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரித்த போதிலும் நாம் இன்பத்தையே நாடுகிறோம். இதற்கு முடிவுதான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி,ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான்.

இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது,தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.சுத்தமாகவும், தூய்மையாகவும், அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.

ஆகவே மற்ற சுகத்தை, புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.

கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம்
ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன.

தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது. அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.

வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.

தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம் தற்பெருமை குறையும்.

மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.

1 comment: